india

img

நாடாளுமன்ற தாக்குதல்: குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசப்பட்ட வழக்கில் 6 பேர் மீது தில்லி சிறப்பு பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மனோரஞ்சன் டி, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத், சாகர் சர்மா, நீலம் ஆகிய 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி சிறப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கூடுதல் குற்றப்பத்திரிகை இன்னும் 2 வாரங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இவ்வழக்கு ஜூலை 15ஆம் தேதி தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரின் நீதிமன்ற காவலையும் நீதிமன்றம் அடுத்த விசாரணை தேதி வரை நீட்டித்துள்ளது.