கடந்த மே மாதம் நடைபெற்ற இள நிலை நீட் தேர்விற்கான வினாத் தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல் வேறு முறைகேடு கள் தொடர்பாக புகார்கள் எழுந் தது. இந்த விவகா ரத்தை சிபிஐ விசா ரித்து வரும் நிலை யில், இதுதொடர் பாக உச்சநீதிமன்ற த்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இளநிலை தேர்வு போல முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத் தாளும் முன்கூட்டியே கசிந்ததாக மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. “நீட் பிஜி லீக் மெட்ரியல்ஸ் (NEET PG Leaked Materials)” என்ற பெயரில் டெலிகிராம் சேனல் ஒன்று செயல்படுவதா கவும், அதில் நீட் முதுகலை வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “நீட் பிஜி லீக் மெட்ரியல்ஸ்” பெயரில் வெளியாகும் வினாத்தாளுக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராம் குழு வில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. டெலி கிராம் செயலியில் இதுபோல் நூற்றுக்க ணக்கான சேனல்களில் நீட் முதுகலை வினாத்தாள் வழங்கப்படும் என்ற தக வல்கள் பகிரப்படுவது முறையாக தேர்வு க்கு தயாராகும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.