india

img

‘இந்தியா’ கூட்டணி 295 இடங்களில் வெல்லும்! ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

புதுதில்லி, ஜூன் 1- “இந்த மக்களவைத் தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி குறைந்தது 295  இடங்களைக் கைப்பற்றும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். “2024 மக்களவைத் தேர்தலில் நாங்  கள் எங்கள் முழு பலத்துடன் போராடி னோம், இந்திய மக்கள் எங்களை ஆத ரித்தது போலவே நேர்மையான முடிவு கள் வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கி றோம்” என்று அவர் கூறியுள்ளார்.

18-ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமையுடன் (ஜூன் 1) 7 கட்டத் தேர்தலும் நடந்து முடிந்தது.  இதில் மாலை 5 மணி நிலவரப்படி 58.34  சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்நிலையில், ஏற்கெனவே அறி வித்தபடி, ‘இந்தியா’ கூட்டணி கட்சி களின்  ஆலோசனைக் கூட்டம், தில்லி யில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே இல்  லத்தில் நடைபெற்றது.  இதில், காங்கிரஸ் சார்பில் சோனியா  காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.  வேணுகோபால், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சார்  பில் பரூக் அப்துல்லா, திமுக சார்பில்  டி.ஆர். பாலு, ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் தேஜஸ்வி, சஞ்சய் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜிதேந்தர் அவாத்,  உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் அனில் தேசாய், ஆம் ஆத்மி கட்சி சார்  பில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,  சஞ்சய் சிங், ராகவ் சந்தா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன் மற்றும் கல்  பனா சோரன்,  சிபிஐ (எம்எல்) சார்பில்  தீபங்கர் பட்டாச்சாரியா, விஐபி சார்பில்  முகேஷ் ஷகானி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின், செய்தி யாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலை வர் கார்கே, “இந்த மக்களவைத் தேர்த லில் ‘இந்தியா’ கூட்டணி 295 இடங்க ளுக்கு மேல் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. நாங்கள் ஒன்றாக உள்ளோம்” என்று தெரிவித்தார். முன்னதாக, தேர்தலுக்குப் பிந்  தைய கருத்துக் கணிப்புகள் தொடர்பு டைய விவாதத்தில் பங்கேற்க காங்கி ரஸ் கட்சி மறுத்து இருந்தது. தேர்த லுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டி யவை என்று காங்கிரஸ் கட்சிக் கூறி யிருந்தது.

இந்நிலையில், ‘இந்தியா’ கூட்ட ணிக் கட்சித் தலைவர்களின் ஆலோ சனைக் கூட்டத்துக்குப் பின்னர் தேர்த லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்க  காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது” என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரி வித்தார். முன்னதாக தனது ‘எக்ஸ்’ பக்கத் தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த கார்கே, “இந்த 2024 மக்களவைத் தேர்த லில் நாங்கள் எங்கள் முழு பலத்துடன் போராடினோம், இந்திய மக்கள் எங்  களை ஆதரித்தது போலவே நேர்மை யான முடிவுகள் வரும் என்றும் நம்பிக்  கையுடன் இருக்கிறோம்” என்று தெரி வித்துள்ளார்.

;