india

img

ஆம் ஆத்மி கட்சியை முடக்க சதி!

தில்லி மதுபானக் கொள்கை  முறைகேடு வழக்கில் ஆம்  ஆத்மி ஒருங்கிணைப்பாள ரும், தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவால், தில்லி முன்  னாள் துணை முதல்வர் மணீஷ்  சிசோடியா, அமைச்சர் சத்யேந்  திர ஜெயின், ஆம் ஆத்மி எம்பி  சஞ்சய் சிங், பிஆர்எஸ் தலை வர் கவிதா என 17க்கும் மேற்பட் டோரை அமலாக்கத்துறை கைது  செய்து சிறையில் அடைத்தது. மது பானக் கொள்கை முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி களாக உள்ள பாஜகவினர் மற்  றும் பாஜக கூட்டணி கட்சித் தலை வர்கள் மீது அமலாக்கத்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கா மல் உள்ள நிலையில், நிரூபிக் கப்படாத குற்றச்சாட்டுக்களை  கூறி “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி  உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் மீது மட்டும் அமலாக் கத்துறை கைது நடவடிக்கையை அரங்கேற்றி வருகிறது. அம லாக்கத்துறையால் நீண்ட நாட் கள் சிறையில் வாடிய சஞ்சய் சிங்  அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீ னில் வெளிவந்துள்ள நிலையில்,  மற்றவர்கள் இன்னும் சிறையி லேயே உள்ளனர். 

இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க கோரி தில்லி முன்  னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசார ணைக்கு வந்தது. “விசாரணை யில் எந்த முன்னேற்றம் இல்லாத தால் மணீஷ் சிசோடியாவை ஜாமீ னில் விடுவிக்க வேண்டும்” என  மணீஷ் சிசோடியா சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் தயான் கிருஷ்  ணன் வாதிட்டார். 

ஆனால் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூஹைப் ஹுசைன், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து,”மதுபானக் கொள்கை வழக்கு குற்றப்பத்திரி கையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரை சேர்க்க உள்ளோம். மது பானக் கொள்கை வழக்கில் கிடைத்த  பணம் மூலம் ஆம் ஆத்மி பல்  வேறு பலன்களை பெற்றுள்ளது.  மேலும் ஆம் ஆத்மி கட்சி முறை கேடாக பணம் ஈட்டியதில் மணீஷ்  சிசோடியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதன்காரணமாகவே குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரை சேர்க்க  திட்டமிட்டுள்ளோம்” என அவர் வாதிட்டார். அமலாக்கத்துறை வழக்கறிஞரின் வாதத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதி பதி மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்த ரவிட்டார். 

சொத்துக்கள் முடக்கப்படும்
அமலாக்கத்துறை கூறியது போல மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டால் அக்  கட்சியின் சொத்துக்கள் அனைத்  தும் முடக்கப்படும் சூழல் உரு வாகும். இதனால் ஆம் ஆத்மி கட்சி செலவினங்கள் இல்லாமல் திண்டாட வாய்ப்புள்ளது. ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்கவே அம லாக்கத்துறை மூலம் மோடி அரசு இத்தகைய சதித்திட்டத்தை தீட்டி யுள்ளது என்பது தெளிவாக உண ரப்படுகிறது.

;