india

img

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில், 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 
முதல் கட்ட தேர்தல்: அக்டோபர் 25-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். அக்டோபர் 30-ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள். நவம்பர் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தல்: அக்டோபர் 29-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். நவம்பர் 1-ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள். நவம்பர் 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.