india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக குழப்ப மான வானிலையே நிலவி வருகிறது. எப்பொ ழுது மழை, வெயில் என்று கணிக்க முடியாத சூழல் உள்ள நிலையில், 3 நாட்களுக்கு முன் தில்லி, மும்பையில் புழுதிப் புயல் வேறு புரட்டியெடுத்துச் சென்றது. இந்நிலையில், கடந்த வாரம் முழுவதும் ஓரளவு நல்ல மழையை பெற்ற  வடமேற்கு இந்தியா வில் மே 18 அன்று வரை வெப்ப அலை வீசும் என் றும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், ஹரியானாவில் அடுத்த 5 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும் என்றும் இந்திய வானி லை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோ பரில் செவ்வாயன்று கனமழை மற்றும் புழுதிப் புயலால் பிரமாண்ட விளம்பரப் பலகை கீழே விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது பாலியல் உட்பட 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய் யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வரு மான மணீஷ் சிசோடியாவின் காவலை மே 30  வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதனன்று உத்தர விட்டது. 

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்து க்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கத்தில் செவ் வாயன்று இரவு லிப்ட் இடிந்து விழுந்ததில் மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர் சிக்கினர். இந்த சுரங்க விபத்தில் ஒருவர் பலியாகிய நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

புதுதில்லி
ரூ.34,000 கோடி கடன் மோசடி
டிஎச்எப்எல் இயக்குனர் 
தீரஜ் வாத்வான் கைது

பிரபல தனியார் வீட்டுக்கடன் வழங் ்கும் நிறுவனமான திவான் ஹவு சிங் பைனான்ஸ் லிமிடெட் (DHFL - டிஎச்எப்எல்) நிறு வனத்தின் பேரில், நாட்டின் 17 முன்னணி வங்கிகளில் முறை கேடாக ரூ.34,000 கோடி கடன் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டிஎச்எப் எல் நிறுவன இயக்குனர் தீரஜ் வாத்வான் கடந்த 2022இல் சிபிஐ-யால் கைது செய் யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் தீரஜ் வாத்வான் ஜாமீனில் விடுவிக் கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தால் வழக்கை விசாரிக்கும் தில்லி நீதி மன்றம் ஜாமீன் உத்தரவை ரத்து செய்தது. இதனால் தீரஜ் வாத்வானை சிபிஐ போலீசார் மீண்டும் கைது செய்த னர். இந்த கடன் மோசடி வழக்கில்  தீரஜ் வாத்வான் மட்டுமின்றி அவரது சகோத ரர் உட்பட 70க்கும் மேற்பட்டோர் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துதில்லி
காட்டுத்தீயை  கட்டுப்படுத்துவதில் மெத்தனம்
உத்தரகண்ட் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கோடைக்காலம் துவக்கத்திலி ருந்து தற்போது வரை பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலத்தில் காட்டுத் தீ பரவி பெரும் சேதத்தையும், அச்சத்தையும் ஏற் படுத்தி வருகிறது. அம்மாநில வனத்துறை தலைமை அதிகாரி தனஞ்சய் மோகனின் அறிக்கையின்படி, ‘காட்டுத் தீ காரணமாக மாநிலத்தில் 1,300 ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள் ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்’எனக் கூறினார்.ஆனால் அம்மாநில பாஜக முதல்வர் இதனை கண்டுகொள்ளாமல் தேர்தல் பணி மற்றும் மக்களுக்கு விரோத மான பொது சிவில் சட்டம், சிஏஏ சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்ற வேலை யை மட்டுமே கவனித்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரகண்ட் காட்டுத் தீ விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், எஸ்.வி.என்.பட்டி, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புத னன்று விசாரணைக்கு வந்தது. விசார ணைக்குப் பின் நீதிபதிகள்,”காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் மெத்தன மாக இருந்த உத்தரகண்ட் அரசின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிக்காக வனத்துறை அதிகாரி கள் அல்லது வனத்துறை வாகனங்களை எந்த மாநிலமும் பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால்  விதிகளை மீறி வனத்துறையை தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டனத்து க்கு உரியது.  உத்தரகண்ட் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வழங்கிய ரூ.9 கோடியில், காட்டுத் தீயைத் தடுக்க  ரூ.3.14 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள் ளது. முறையாக ஒன்றிய அரசு அளித்த நிதியை ஏன் பயன்படுத்தப்பட வில்லை? வனத்துறையில் ஏன் அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளன? தீயணைப்பு கருவிகள் பற்றாக்குறை, தேர்தல் ஆணையம் விதிவிலக்கு அளித்தும் வனத்துறை அதிகாரிகளை பணியமர்த்தியது ஏன்? இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில தலைமை செயலாளர் மே 17 அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரகண்ட் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். 

கான்பூர்
உத்தரப்பிரதேச பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் 

கடந்த சில வாரங்களாக தில்லி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய வட இந்திய மாநிலங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களை குறிவைத்து மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. செவ்வாயன்று தில்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலை யில், புதனன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 10 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப் பட்டு, போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்க வில்லை என்றாலும், வெடிகுண்டு மிரட்டலால் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.