india

img

வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்துக! தேர்தல் ஆணையர்களிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

புதுதில்லி, ஜுன் 3 - ஜுன் 4 செவ்வாயன்று மக்கள வைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல்  ஆணையம் நேர்மையான முறை யிலும் சட்டப்பூர்வமான முறையிலும் செயல்பட வேண்டும் என்று இந்தியா  கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஞாயிறன்று (ஜுன் 2) சந்தித்துப் பேசி னர். காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங் மான்வி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். 

ஜுன் 4 வாக்கு எண்ணிக்கை நடை பெறும் போது நேர்மையான முறை யிலும், சட்டப்பூர்வமான முறை யிலும் வாக்கு எண்ணிக்கை நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணை யர்களிடம் வலியுறுத்தினோம். வாக்கு எண்ணிக்கை தொடர்பான தெளிவான வழிகாட்டு நெறி முறைகளை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும்; 1961 தேர்தல் விதிகளின்படி தபால் வாக்குகளைத் தான் முதலில் எண்ண வேண்டும் என்ற வழிகாட்டுதலை அளிக்க  வேண்டும்; அனைத்து வாக்குப் பெட்டிகளின் கண்ட்ரோல் யூனிட்டு களும் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பதை சிசிடிவி கேமிரா மூலம்  முறையாக கண்காணிக்க வேண்டும்; கண்ட்ரோல் யூனிட்டுகளின் தேதி, நேரம் ஆகியவற்றையும் வாக்குப் பதிவு தினத்தின்போது அந்த கண்ட்ரோல் யூனிட்டில் வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிந்த நேரம் ஆகியவற்றை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்; வாக்கு எண்ணி க்கை முகவர்களின் விபரங்களை அவசியம் வெளியில் தெரியப் படுத்த வேண்டும்; வேட்பாளர்களின் வெற்றி-தோல்வி முடிவுகளை அறி விப்பதற்கு முன்பு வாக்குப்பதிவு நடந்த நாள், சம்பந்தப்பட்ட வாக்கா ளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளை கட்டாயம் வெளியிட வேண்டும்; முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அந்த எண்ணிக்கை விபரங்களை பதிவு  செய்வதற்கு முழுமையாக அனு மதிக்க வேண்டும்; அவசர கதியில் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். 

வாக்கு எண்ணிக்கை நடைமுறை யில் எந்த ஒளிவுமறைவுமின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் நடை முறையில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக செயல்படு வதை தேர்தல் ஆணையம் உறுதிப் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

;