புதுதில்லி, செப். 4 - பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதவி புச் விதிமுறை களை மீறி, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்தும் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அது ஊதியம் அல்ல, ஓய்வூதியம் என்று ஐசிஐசிஐ வங்கி விளக்கம் கொடுத்திருந்தது.
மாதவியைக் காப்பாற்றுவதாக கருதி, இவ்வாறு ஐசிஐசிஐ அளித்த விளக்கமானது தற்போது அவரை மேலும் சிக்கலில் மாட்டி விட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு கூடுதல் ஆதா ரங்களை அளிப்பதாக மாறியிருக்கிறது.
மாதவி பூரி புச், 2007 முதல் 2013-14 வரை ஆண்டு சராசரி ஊதியமாக ரூ. 1 கோடியே 30 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், 2016 - 17 முதல் 2020 - 2021 வரை ஐசிஐசிஐ வழங்கியதாகக் கூறப்படும் ஓய்வூதியத் தொகையின் ஆண்டு சராசரி மட்டும் ரூ. 2 கோடியே 77 லட்சமாக காட்டப்பட்டு உள்ளது.
இதன்மூலம், ஒரு ஊழியருக்கு ஊதி யத்தை விடவும், அவரின் ஓய்வூதியப் பலன்கள் அதிகமாக இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பவன் கேரா வும் இதனைக் கேள்வியாக எழுப்பியுள் ளார்.
அது மட்டுமல்லாமல், மாதவி பூரி புச்-சிற்கு பதிலாக, ஐசிஐசிஐ வங்கியே வருமான வரிக் கழிவு தொடர்பான டிடிஎஸ் (TDS) செலுத்தியிருக்கிறது. இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் ஊழியர்கள், அதி காரிகள் அனைவருக்கும் வங்கி நிர்வாகம் தான் டிடிஎஸ் செலுத்துகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. எனவே, மாதவி பூரி புச்சும், ஐசிஐசிஐ வங்கியும் இணைந்து வருமான வரித்துறை மோசடி யிலும் ஈடுபட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.