india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தென்மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வடமாநிலங்களில் வெப்ப  அலை வீசி வருகிறது. இத்தகைய சூழலில் தில்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலைவீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரவிடு முறை நாட்கள், பண்டிகை நாட்களில் வழக் கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் ஏழுமலையான் கோவிலின் உண்டியலில் பக்தர்கள் ரூ.4.40 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன் தாஸ் என்பவர் ஓய்வு பெறும் போது நடந்த பிரிவு உபசார விழாவில்,”நான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர். தனது குழந்தை பருவம் முதல், இளமை பருவம் வரை அங்கே இருந்தேன். அதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடி யாவின் நீதிமன்ற காவல் மே 31 வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.

பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வீடியோ விசா ரணைக்கான காவல்துறை உளவு போர்வை யில், தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் என 40 நபர்களின் போன்கள் ஒட்டுக்கேட்புக்கு ஆளாகியிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வ ரான எச்.டி.குமாரசாமி கதறியுள்ளார்.

“நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி” என்று அதிமுக முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டியது, அதி முக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? மாநில அரசை ஒரு தமிழர் வழி நடத்தலாமா? பாஜக  ஆட்சிக்கு வந்தால் ஒடியா மொழியை பேசும் ஒரு இளம் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார்” என  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு சமூகவலைத்தளங்களில் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிவ சேனா (உத்தவ் பிரிவு) வாக்குச் சாவடி முகவர் கழிப்பறையில் இறந்து கிடந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு
பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க கர்நாடக எஸ்ஐடி கடிதம்

பாஜக கூட்டணி கட்சியான மதச்  சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) தலைவரும், முன் னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா எம்பி (ஹாசன்), தனது அதிகாரத்தை பயன்படுத்தி  ஏழைப்பெண்கள், அரசு ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கடந்த ஏப்ரல் 25 அன்று வெளியாயின. 

வீடியோ வெளியானவுடன் ஐரோப் பிய நாடான ஜெர்மனிக்கு பிரஜ்வால் ரேவண்ணா தப்பி ஓடிவிட்டார். தற்போது  அவர் துபாயில் இருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்நிலையில், பிரஜ் வால் ரேவண்ணாவை தேட மற்றும் கைது  செய்ய ரெட் கார்னர் மற்றும் புளு கார்னர்  நோட்டீஸ் மூலம் சர்வதேச அளவிலான நடவடிக்கைகளில் கர்நாடக எஸ்ஐடி தீவி ரமாக களமிறங்கியுள்ளது. இதைத்  தொடர்ந்து, பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி வெளியு றவுத்துறைக்கு கர்நாடக எஸ்ஐடி போலீ சார் கடிதம் எழுதியுள்ளனர்.

கொல்கத்தா
பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை

மேற்குவங்க மாநிலம் தம்லுக் தொகுதியின் பாஜக வேட்பாள ரும், கொல்கத்தா உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் கடந்த மே 15 அன்று திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவ ரும்,  மேற்குவங்க முதல்வருமான மம்தா  பானர்ஜி குறித்து மிகவும் மோசமான வகையில் அவதூறாகப் பேசி  இருந்தார்.  அபிஜித்தின் பேச்சிற்கு திரிணாமுல் காங்  கிரஸ் கட்சி மட்டுமின்றி நாடு முழுவதும் கண்டனம் குவிந்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர் பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில், மே 17 அன்று அபிஜித் கங்கோபாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யது. மே 20 அன்று தேர்தல் ஆணையத்தி டம் அவர் விளக்கம் அளித்த நிலையில்,  செவ்வாயன்று தேர்தல் ஆணையம், “அபிஜித்தின் பேச்சுக்கள் தேர்தல் விதி முறைகளை மீறியது. மே 21 மாலை 5 மணி  முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக் கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளது.