india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரளத்தைப் பின்னுக்குத் தள்ள முயற்சி
ஒன்றிய அரசு மீது முதல்வர் குற்றச்சாட்டு

கேரளத்தைப் பின்னுக்கு தள்ள ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது; ஒக்கி, நிபா, கோவிட் போன்ற நெருக்கடியிலும் உதவ மறுத்து விட்டது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

புதிய கேரள அரங்கத்தின் ஒரு பகுதியாக திருச்சூர் மாவட்டத்தில் பல்வேறு தொகுதிகளில் முதல்வர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நமது மாநிலத்தின் மறுவாழ்வு உலக கவனத்தைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணத்தில் கூட ஒன்றிய அரசு நமக்கான உரிமையை மறுத்தது. மாநிலம்  கைதூக்கி விடப்பட வேண்டிய கட்டத்தில் ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உதவி செய்யத்  தயாராக இருந்த நாடுகள் கூடத் திருப்பி அனுப்பப்பட்டன. கேரளா மீண்டு விடக்கூடாது என்பது மட்டுமே ஒன்றிய அரசின்  இலக்கு.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உதவிகளை நிராகரித்து, கேரளத்தை சுரண்டும் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. இந்தக் கட்டங்களில் எதிர்க்கட்சியான யுடிஎப்-பும் கேரளத்துடன் நிற்காமல் எதிர்ப்பை எழுப்ப முயன்றது. அது இன்றுவரை தொடர்கிறது. ஒன்றிய அரசின் பாகுபாட்டைக் கூட கேள்வி கேட்க யுடிஎப் தயாராக இல்லை. கேரளத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய நாடாளு மன்றத்தில் யுடிஎப் எம்.பி.க்கள் மவுனம் காக்கின்றனர்.

பெருவெள்ளத்தின் போது ஊழியர்களின் சம்பளம் சவாலைக் (திருப்பி அளிக்கும் வகையில் பிடித்தம் செய்தல்) கூட எதிர்த்தனர். இக்கட்டான சூழ்நிலையிலும் கேரளத்திற்கு துணை நிற்க யுடிஎப் தயாராக இல்லை. ஒவ்வொரு காலத்திலும் செய்ய வேண்டியதைச் செய்து உரிய காலத்தில் முன்னேற்றம் காண அரசு முயற்சிக்கிறது. மக்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும்தான் மறுவாழ்வுக்கான அடிப்படை. ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் எதிர்கொண்டால் நம்மால் முடியாதது எதுவுமில்லை. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

பட்டியலின - பழங்குடி பெண்கள், 
குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு

மோடி ஆட்சியில் பட்டியல் - பழங்குடி யினர் மற்றும் குழந்தைகள்  மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக சைபர்  குற்றங்கள்  எண்ணிக்கை பெருமளவுஅதிகரித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ஆண்டு  குற்ற அறிக்கையையும், இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் தொடர்பான அறிக்கையையும் டிசம்பர் 3 அன்று வெளியிட்டது. இதில், ஒட்டு மொத்த குற்ற விகிதம் 2021-இல் 7 சதவிகித மாக இருந்தது, 2022-இல் 6.9 சதவிகித மாக சுமார் 0.1 சதவிகிதம் குறைந்துள் ளது என்றாலும், நரேந்திர மோடி தலைமை யிலான ஆட்சியில், பெண்கள் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சைபர் குற்றங்கள், 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான  குற்றங்கள் 4% அதிகரிப்பு

2022-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,45,256 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது  2021-ஐ விட நான்கு சதவிகிதம் அதிகம்.  2022-ஆம் ஆண்டு பிபிசி நிறுவனம் உலக சுகாதார அமைப்பை மேற்கோள்காட்டி  வெளியிட்டுள்ள அறிக்கையில் “உல களவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதாகவும் இந்த எண்ணிக்கை யும் இந்தியாவின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் கூறியுள்ளது”.

2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது 2016-ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளில் 26.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்கள் 9.3% அதிகரிப்பு

2022-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1,62,449 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட  8.7 சதவிகிதம் அதிகம். 

மூத்த குடிமக்கள், எஸ்.சி., எஸ்.டி.-க்களுக்கு எதிரான மற்றும் பொருளாதாரம் தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன.

மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல்)  மீது 28,545 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது, 2021-ஆம் ஆண்டை விட  (26,110 வழக்குகள்) 9.3 சதவிகிதம்அதிகம். 

எஸ்.சி.-எஸ்.டி.-ளுக்கு எதிரான குற்றங்கள் 13.1% அதிகரிப்பு
பட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்களுக்காக மொத்தம் 57,582 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 13.1 சதவிகிதம் (50,900 வழக்குகள்) அதிகம்.

பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக குற்றம் செய்ததற்காக மொத்தம் 10,064 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 14.3 சதவிகி தம் (8,802 வழக்குகள்) அதிகம். சைபர் குற்றங்களின் கீழ், 65,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2021-ஆம் ஆண்டை விட 24.4 சதவிகிதம் அதிகம்.