55ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 55ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேக் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் கலந்த பாப்கார்னுக்கு 5% ஜி.எஸ்.டி-யும், பேக் மற்றும் லேபிள் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜி.எஸ்.டி-யும், சர்க்கரை சேர்க்கப்பட்ட கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜி.எஸ்.டி-யும் விதிக்க பரிந்துரை. மேலும், பயன்படுத்தப்பட்ட பேட்டரி கார்கள் மற்றும் பழைய கார்களுக்கான ஜி.எஸ்.டி-யை 12 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.