india

img

போராட்டக் களத்தை விளைநிலமாக்கிய விவசாயிகள்!

புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் போராடி வரும் விவசாயிகள் அங்குள்ள நிலத்தில் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 33வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்ட களத்தையே விளைநிலமாக விவசாயிகள் மாற்றியுள்ளனர். 
புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் போராடி வரும் விவசாயிகள் அங்குள்ள நிலத்தில் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 

எத்தனை நாட்கள் ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளதாகவும், ஆகவே தங்களது உணவுக்கு தேவையான பொருட்களை தாங்களே விளைவிக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.