இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை, கடந்த நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்திருப்பதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், கடந்த நிதியாண்டில் 4 லட்சத்து 29 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார வாகனங்களில் இருசக்கர வாகனங்களே அதிகபட்சமாக விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 338 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
நான்கு சக்கர வாகனங்களை பொறுத்தவரை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 300 மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.