india

img

இந்திய ரயில்வேக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு லஞ்சம் - வாய்திறக்காத மோடி அரசு

இந்திய ரயில்வே அமைச்சகத்திற்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு ஆரக்கள் நிறுவனம் லஞ்சம் வழங்கியது தொடர்பாக மோடி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினை தலைமையிடமாகக் கொண்ட கணினி தொழில்நுட்ப நிறுவனம் ஆரக்கள் கார்போரேஷன். இந்த நிறுவனம் கடந்த 2016-ல் இருந்து 2019 வரை இந்திய ரயில்வே அமைச்சகத்திற்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 4 லட்சம் டாலர் (ரூ.3.26 கோடி) லஞ்சம் வழங்கியதாக அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஆரக்கள் நிறுவனம், அமெரிக்க ஆணையத்துக்கு 23 மில்லியன் டாலர் அபராதமாகச் செலுத்த முன்வந்துள்ளது. 

இந்த நிலையிலும், அதிகாரிகளுக்கு ஆரக்கள் நிறுவனம் லஞ்சம் வழங்கியது தொடர்பாக மோடி அரசோ அல்லது புலனாய்வு அமைப்புகளோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும், ரயில் பவன் அதிகாரிகளும் இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும், அமலாக்கத்துறை இதற்கு பதிலளிக்கக்கூடாது என்று இருப்பதாகவும் ’தி வயர்’ இணைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.