நாடாளுமன்ற பாதுகாப்பு தோல்வியை மறைக்கவும், நாடாளுமன்றத்தில் விளக் கம் அளிக்காமல் தப்பிப்பதற்காக வும் அவையை அமைதியின்மை ஆக்கியதாக கூறி 146 எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஒன்றிய மோடி அரசு. இந்த எதேச் சதிகாரத்தை கண்டித்து செவ்வா யன்று இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் திரிணா முல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தன்னை போல “மிமிக்ரி” செய்ததாகவும், இதனை ஆதரித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வீடியோ எடுத்ததாகவும் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலை வருமான ஜகதீப் தன்கர் குற்றம் சாட்டினார். 146 எதிர்க்கட்சி எம்பிக்க ளின் இடைநீக்க விவகாரத்தை திசை திருப்பும் விதமாக பிரதமர் மோடி ஜகதீப் தன்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வேதனை யை வெளிப்படுத்தினார். பாஜக அமைச் சர்கள், எம்பிக்கள் ஜகதீப் தன்கருக்கு ஆதரவாகவும், மிமிக்ரிக்கு கண்ட னம் தெரிவிப்பதாகவும் திசை திருப் பும் செயல்களில் கட்சிதமாக ஈடுட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் பதிலடி
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் குடியரசு துணைத்தலை வரும், மாநிலங்களவை தலைவ ருமான ஹமீது அன்சாரியை, பிரத மர் மோடி அவமதித்த வீடியோவை வெளி யிட்டு பாஜகவின் திசை திருப்பல் சம்பவத்திற்கு பதிலடி கொடுத்துள் ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ், கூறுகை யில்,”இந்தியாவின் குறிப்பிடத்தக்க ராஜதந்திரிகளில் ஒருவரான ஹமீது அன்சாரி குடியரசு துணைத் தலை வர் மற்றும் மாநிலங்களவை தலைவ ராக 10 ஆண்டுகள் பணியாற்றி 2017 ஆகஸ்ட் 10 அன்று ஓய்வு பெற்றார். நாடாளுமன்ற அரங்கில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் பொழுது அவரை கேலி செய்யும் வகையில் பிர தமர் மோடி பேசியிருந்தார். அதாவது ஹமீது அன்சாரியின் மத அடையா ளத்தை குறிப்பிட்டு அன்சாரியின் அர சியல் சாதனைகள் அனைத்துமே அவ ரது மத அடையாளத்தால் மட்டுமே கிடைத்ததாக பேசினார். இப்படி ஒரு அவதூறு நிகழ்வை அரங்கேற்றிய பிரதமர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது அவமரியாதை குறித்து பேசுவது சந்தர்ப்பவாதம் மட்டுமே. மக்களவையில் நடந்த அத்துமீறல் சம்பவம் மற்றும் எதிர்க்கட்சி எம்பி க்கள் இடைநீக்கம் ஆகியவற்றி லிருந்து திசை திருப்பவே இவ்வாறு நடந்து கொள்கின்றனர்” என்று தனது எக்ஸ் தளத்தின் பதிவில் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
வீடியோ வெளியானதும் பாஜக மீண்டும் திசை திருப்பல் போராட்டம்
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியை பிர தமர் பொறுப்பில் இருக்கும் மோடியே கேலி செய்ததாக கூறி காங்கி ரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆதாரத்துடன் பதிலடி வீடியோ வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த பாஜக வழக்கம் போல இவ்விவ காரத்தை திசை திருப்பும் நோக்கில் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் “மிமிக்ரி” சம்பவத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக பெண் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.