india

img

முடங்கியது யுபிஐ பரிவர்த்தனைகள்

நாடு முழுவதும் யுபிஐ (UPI) எனப்  படும் ஸ்கேன் வசதி மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தும் முறை தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ரூபாயில் துவங்கி அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூகுள் பே,  போன்பே, பீம் யுபிஐ உள்ளிட்ட செயலி கள் பரிவர்த்தனைகளுக்கு சிறந்த வசதி களை அளித்து வருகின்றன. 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் வங்கிகளின் சர்வர்கள் முடங்கியதால் நாட்டின் பல்வேறு இடங்க ளில் வங்கி செயலிகள் மற்றும் யுபிஐ  செயலிகள் முடங்கின. ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியா, ஹெச்டிஎப்சி பேங்க், பேங்க்  ஆப் பரோடா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா,  கோடக் மகேந்திரா பேங்க் ஆகிய வற்றின் யுபிஐ பரிவர்த்தனைகள் புத னன்று இரவு வரை முழுமை பெறாமல் இருப்பதாக பயனர்கள் புகார் தெரி வித்து வருகின்றனர்.