மக்களவைத் தேர்தல் நெருங் கியுள்ள நிலையில் மோடி பாஜக ஆளும் மாநிலங்க ளில் பிரதமர் போன்றும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ளூர் பாஜக தலைவர் போன்றும் பேசி வருகிறார். கடந்த மாதம் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவதாக கூறி, பிரதமர் பத வியை மறந்து தரம் தாழ்ந்து பேசினார்.
இந்நிலையில், 7 நாட்கள் இடை வெளிக்கு பிறகு மீண்டும் மார்ச் 4 அன்று கல்பாக்கம், ஈனுலையை திறக்க சென்னை வந்த பிரதமர் மோடி இந்நிகழ்வை நிறைவு செய்து, நந்தனம் ஒய்எம்சிஏ மைதா னத்தில் நடைபெற்ற பாஜக தேர் தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில், “தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஆதரவில், போதைப் பொருட் கள் நடமாட்டம் அதிகரித்திருப்பது எனது மனதை வருத்தமடையச் செய்திருக்கிறது. நமது வருங்கால சந்ததியினரான குழந்தைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருள்கள் விற்பனை பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இந்த போதைப் பொருள் கடத்த லுக்குத் துணைபோகும் கட்சிகளி டம் எச்சரிக்கையாக இருக்க வேண் டும். பொதுமக்கள் முழு ஆதரவு டன், பாஜக போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக் கும் என்பதே மோடியின் கேரன்டி” என்று பேசினார்.
அதாவது நாட்டிலேயே தமிழ் நாட்டில்தான் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் இருப்பதாக பிர தமர் மோடி கூறியுள்ளார். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டை விட பாஜக ஆளும் மாநிலங்களிலேயே போதைப்பொருட்கள் அதிகமாக புழங்கி வருகின்றன.
முதல் 10 இடங்களில் பாஜக ஆளும் 7 மாநிலங்கள்
கடந்த 2023 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் போதைப்பொருட்கள் பறிமுதல் தொடர்பான அறிக்கையை ஒன் றிய அரசு வெளியிட்டது. அதில் கடந்த 2022 - 2023 காலகட்டங்க ளில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 3.21 லட்சம் கிலோ அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என் றும், அதிகபட்சமாக தற்போது பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் 1.46 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதல் 10 இடங்களில் 1. ராஜஸ் தான் (1.46 லட்சம் கிலோ), 2. பஞ்சாப் (46,502 கிலோ), 3. மத்தி யப்பிரதேசம் (32,589 கிலோ), 4. ஜார்க்கண்ட் (32,376 கிலோ), 5. மணிப்பூர் (17,149 கிலோ), 6. குஜ ராத் (12,838 கிலோ), 7. ஹரியானா (11,195 கிலோ), 8. பீகார் (7,358 கிலோ), 9. மேற்குவங்கம் (5,446 கிலோ), 10. உத்தரப்பிரதேசம் (4,528 கிலோ) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதில் ராஜஸ்தான் (தற்போது), மத்தியப்பிரதேசம், மணிப்பூர், குஜ ராத், ஹரியானா, பீகார் (பாஜக கூட்டணி), உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களாக உள்ளன. முதல் 20 இடங்களில் கூட பாஜக ஆளும் மாநிலங்கள் 12 இடங்களில் உள்ள நிலையில், போதைப்பொருள் பறி முதல் விவகாரத்தில் 20-ஆவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை பிர தமர் மோடி அரசியல் ஆதாயத் திற்காக விமர்சித்துள்ளார்.
இதனை ஏன் மோடி மறந்தார்?
கடந்த மாதம் குஜராத் மாநிலம் வெராவல் கடற்கரையோரத்தில் 3300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய் யப்பட்ட நிலையில், இதன் மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் என தக வல் வெளியாகியுள்ளது. தனது சொந்த மாநிலத்திலேயே போதைப் பொருள்களின் கடத்தல் உச்சத்தில் உள்ள நிலையில், பிரதமர் மோடி தரம் தாழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மோடியின் இந்த பேச்சிற்கு தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி உள் ளிட்டவர்கள் ஆதாரத்துடன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.