india

img

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுக்காக காத்திருக்கும் பாஜக!

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுக்காக காத்திருக்கும் சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் நேற்று வெளியானது. இதில்  பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்று தனிப் பெரும்பான்மை பெற முடியாமல், தொங்கலில் நிற்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 7 இடங்களிலும், சிராக் பஸ்வானின் எல்ஜேபி 5 இடங்களில் வென்றுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணி மொத்தம் 235 இடங்களை கைப்பற்றியுள்ளது. 
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுக்காக காத்திருக்கும் சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி தரப்பில் இருந்தும் அழைப்பு விடுக்கப்படுவதால் முக்கிய இலாகாக்கள், சபாநாயகர் பதவி வேண்டும் என பாஜகவிடம் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

;