உத்தரப்பிரதேசத்தில் பதவிக்காக பாஜகவினர் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகின்றனர். இந்நடவடிக்கைகள் பாஜக ஆட்சியின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றன. அரசை விட கட்சி பெரியது என ஒருபுறமும், காணொலி வெளியிட்டு பேசுபவர் மறுபுறமும், தலைமையை கேட்காமல் பேசுபவர் வேறொருபுறமும் என நாளுக்கு நாள் பாஜகவின் நிலை மோசமாகி வருகிறது.