india

தில்லியில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக பேரம்

நாட்டில் மோடி பிரதமர் ஆன காலத்தில் இருந்து குதிரை பேரம் மூலம் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை  கவிழ்ப்பதை பாஜக வாடிக்கை யாகக் கொண்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் பெரும்பாலான வடமாநிலங்கள், மகாராஷ் டிரா, கர்நாடகா, மத்தியப் பிர தேசம் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி சட்டவிரோ தமாக பாஜக அல்லது பாஜக  கூட்டணி ஆட்சி அமைக்கப்பட் டுள்ளது. இதன் வரிசையில் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டதாக தில்லி  முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்  கிணைப்பாளருமான அரவிந்த்  கெஜ்ரிவால் குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர்  எக்ஸ் பக்கத்தில் அவர் கூறு கையில்,”சமீபத்தில் பாஜக தில்லியைச் சேர்ந்த எங்கள்  (ஆம் ஆத்மி) 7 எம்எல்ஏக்க ளைத் தொடர்பு கொண்டு, சில  நாள்களுக்குப் பிறகு கெஜ்ரி வாலைக் கைது செய்து, ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். 21  எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மற்ற எம்எல்ஏ-க்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகி றோம். அதன்பிறகு தில்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்ப் போம். நீங்களும் பாஜகவுக்கு வரலாம். ரூ.25 கோடி தருகி றோம்.

பாஜக சார்பில் தேர்த லில் போட்டியிட வாய்ப்பும் வழங்குகிறோம் என தெரிவித் துள்ளனர். பாஜக 21 எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினாலும், 7 எம்எல்ஏக்களைத்தான் அவர் கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாஜக வின் ஆசைக்கு அடிபணிய வில்லை. மதுபான கொள்கை  ஊழல் வழக்கை விசாரிப்பதா லேயே நான் கைது செய்யப்படு வேன் எனக் கூறுவதில் அர்த்த மில்லை. ஆனால் இந்த விவகா ரத்தை வைத்து பாஜக தில்லி ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்கிறது” என அவர் கூறியுள்ளார்.