மும்பை “ஹூரன் இந்தியா” என்ற அமைப்பு இந்தியப் பணக்காரர்கள் குறி த்து பட்டியலையும், தகவல்க ளையும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை “ஹூரன் இந்தியா”வின் நிறுவனரும், தலைமை ஆராய்ச் சியாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைத் வெளி யிட்டார். அதில்,”கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்பு டன் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இவரை தொடர்ந்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.10.14 லட்சம் கோடி சொத்து மதிப்பு டன் இரண்டாவது இடத்தையும், ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் மூன்றாவது இடத்தி லும், ரூ. 2.89 லட்சம் கோடி சொத்து மதிப்பு டன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சைரஸ் எஸ்.பூனாவாலா மற்றும் அவரது குடும்பம் பட்டியலில் நான்காவது இடத்திலும், சன் ஃபார்மா இண்டஸ்ட்ரீஸின் திலீப் சாங்வி ரூ. 2.49 கோடிசொத்து மதிப்புடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர்
மேலும்,“இந்தியாவில் ஒவ்வொரு 5 நாட்க ளுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாகி வரு கின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், கூடுதலாக 220 பேர் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக் களை வைத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ரூ.1000 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது” என ஹூரன் இந்தியா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஹூரன் இந்தியா” இந்திய பணக்காரர் பட்டி யலில் முதல் 2 இடத்தில் இருக்கும் அதானி, அம் பானி ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான நண்பர்கள் ஆவர்.