நாடு முழுவதும் வெள்ளியன்று (இன்று) குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் பொது இடங்கள் பொதுமக்களை கவரும் வகையில் அலங்கரிக்கப் பட்டு காட்சியளிக்கின்றன. அதன்ஒருபகுதியாக கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அலுவலக மான டவுன்ஹால் பகுதியிலுள்ள விக்டோரியா ஹால் மூவர்ண விளக்குளால் ஒளிரும் வகையில் காட்சியளிக்கிறது.