india

விவசாயத் தொழிலாளர்களை முற்றாக புறக்கணித்த பட்ஜெட்

பாஜக கூட்டணி அரசின்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த ஒன்றிய பட்ஜெட், நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது. விவசாயத் தொழிலாளியை இந்த அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. 

வாக்குகளைப் பெறுவதற்காக மதவாதப்  பிரிவினையைப் பயன்படுத்தும் கட்சியான பாஜக, கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை  மற்றும் வாழ்வாதாரத்தின் மீது வெட்கக்கேடான தாக்குதலைத் தொடர்கிறது.

விலைவாசி உயர்வுக்கு என்ன பதில்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறி முகப்படுத்திய பொருளாதார ஆய்வறிக்கை யில், உணவுப் பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்து மக்களை வதம் செய்கிற போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொய் பேசுகிறார். விலைவாசி உயர்வைத் தீர்க்க பட்ஜெட் முயற்சிக்கவில்லை. பொது விநி யோக முறையை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. முந்தைய ஆண்டில், உணவுப் பாதுகாப்புக்காக ரூ.2.12 லட்சம் கோடியாக இருந்த ஒதுக்கீடு, இந்த  ஆண்டு ரூ.2.05 லட்சம் கோடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. இதற்கு முன், உணவுப் பாது காப்புக்காக 2.72 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த உயர்வும் இல்லை 

தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு  ஏற்கனவே ஒதுக்கீடு செய்த ரூ.86,000 கோடியிலிருந்து   அதிகரிக்க வில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.90,000 கோடியாக இருந்தது. தற்போது குறைந்தபட்சம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஒதுக்கீட்டை சற்றும் உயர்த்தாதது கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு திட்டத்தை தீர்க்க உதவாது. இதன் காரணமாக வேலை தேடி இடம் பெயர்தல் அதிகரிக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்ஜெட்டின் மொத்த நிதி அளவு   44 லட்சம் கோடியி லிருந்து 48 லட்சம் கோடியாக 10% அதிகரித்திருக்கும் போது, ​​ அனைத்து நலத் திட்டங்களுக்கும்   நிதி  ஒதுக்கீடு  அதிகரிப்பைச்  செய்திருக்க  வேண்டும்.  

• பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில்  3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில், 55,000 கோடிரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 32,000 கோடி ரூபாய் தான் செலவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

• அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டில் கூட  கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ.21,527 கோடியிலிருந்து    தற்போது 21,200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.உரத்துறையின்கீழ் கடந்த ஆண்டு ரூ.1,85,000 கோடி ஒதுக்கப்பட்டது, அது இப்போது ரூ. 1,64,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 80 கோடி கிராமப்புற விவசாயிகள், 
25 கோடி எஸ்சி, எஸ்டியினர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

‘நிலச் சீர்திருத்தங்கள்’ மூலம் மக்களின் நிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பகிர்ந்த ளிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள்   அம்பானி கள், அதானிகளிடம் ஒப்படைக்கப் படுவதற்கான பட்ஜெட்டாக இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களால் தயாரிக்கப் பட்டு, மத அடிப்படைவாதிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, நிர்மலா சீதாராமனால் வாசிக்கப்பட்ட பட்ஜெட் இது.

எனவே, ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதி களில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங் களுக்கு அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஏ.விஜயராகவன்,  பொதுச்செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...