புதுதில்லி, மே 6-
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநாட்டு மருத்துவர்கள் 65 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தில்லி, சண்டிகர், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் நேபாளத்தை சேர்ந்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 65 மருத்துவர்கள், பயிற்சி பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை ஊதியம் பெறவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.