தில்லியில் 200 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்பொருள் கடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சுமார் 50 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு துணை காவல் ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் கூறியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு உள்நாட்டில் உள்ள கட்டுப்பாடுகளால் மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவனும், பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ஒருவனும் கைதாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை காவல் ஆணையர் மனோஜ் திக்ஸித் தலைமையில் அமைக்கப்பட்ட குழு போதைப்பொருள் கடத்தும் கும்பலை தேடி வந்தது. இன்று 2 கடத்தல்காரர்கள் தில்லிக்கு அதிகளவிலான போதைப்பொருளை தில்லிக்கு கொண்டுவருவதாக கிடைத்த தகவலையடுத்து நடந்த சோதனையில் சுபியான் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவர் சிக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களில் நடந்த போதைப்பொருள் கடத்தலில் இதுவே மிகப்பெரியதாகும்.