india

img

கர்நாடகாவிற்குள் நுழைய 4 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தடை

வரும் மே 31 வரை, கர்நாடகாவிற்குள் நுழைய தமிழகம் உட்பட 4 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, இந்த ஊரடங்கு 4வது முறையாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நோய் தொற்று குறைந்துள்ள பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் கோவிட்-19 தொற்று இல்லாத பகுதிகளில், அரசு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 30 பேர் மட்டுமே பேருந்துகளில் தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், வரும் மே 31 வரை, கர்நாடகாவிற்குள் நுழைய தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.