india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

2016-19 ஆம் ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வில் 20 சதவீத தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது. 20 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார்? என்றும்உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

                                                **********************

கோவேக்சின் தடுப்புமருந்தை பரிசோதனைக்காக தனது உடலில் செலுத்திக் கொண்ட அரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

                                                **********************

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தகுதியின் அடிப்படையில், அரிசிபெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

                                                **********************

தமிழகத்தில் 2,600 இடங்களில் தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

                                                **********************

மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் டிசம்பர் 10 அன்று ‘வெபினார்” செயலி வழி காணொலிக்காட்சி மூலம் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

                                                **********************

அமைதியான முறையில் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும் அவர்களின் போராட்டங்களுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றும்  ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

                                                **********************

புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு டிசம்பர் 10ஆம்தேதி பிரதமர் மோடி அடிக்கல்நாட்ட உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.