india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 15 அன்று  6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரு
மாறு விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

                                               **********************

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கரூர்,அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற் கொள்கிறார்.

                                               **********************

கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களையே அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் எனஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

                                               **********************

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சனிக்கிழமையன்று 2 லாரிகள் மோதி விபத்தாகிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அப்போது லாரி ஒன்று திடீரென பழுதாகி சாலையில்  சென்றுகொண்டிருந்த 11 வாகனங்கள் மீது மோதி  கோரவிபத்துக்குள்ளாக்கியது. இதில் 4 பேர்பலியாகினர்.

                                               **********************

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், எலூரில் வினோத குரல், வலிப்புடன் கூடியமர்ம நோயால் மக்கள் பாதிக்கப் பட்டதற்கு, அரிசியில் கலந்திருந்த பாதரசமும் காய்கறிகளில் நிர்ணயித்தஅளவை விட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் இருந்ததுதான் காரணம் என்று  ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன  (என்ஐஎன்) வல்லுநர்கள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

                                               **********************

தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

                                               **********************

இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான சுயதனிமைப்படுத்தும் கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.

                                               **********************

சென்னை தனியார் நிறுவனத் தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                               **********************

பொறியியல் மாணவர் களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கல்வியாண்டுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகள் அப்படியே தொடரும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

                                               **********************

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 41-ஆவது பட்டமளிப்பு விழா டிசம்பர் 17 அன்று நடைபெறுகிறது.

                                               **********************

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்நடத்திய சோதனையில் சுமார் 10  லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                               **********************

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

                                               **********************

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவ தலைமை தளபதியுடன் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே  பேச்சுவார்த்தை நடத்தினார்.

;