india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

டிசம்பர் 4 அன்று கான்பெர்ராவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி-20கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில்தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிவென்றது.

                                  ******************

பெட்ரோல் லிட்டருக்கு 85.76 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.45 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

                                  ******************

தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. 

                                  ******************

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தர விட்டுள்ளது.

                                  ******************

கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைத்துவிடும் என நிபுணர்கள் கூறியதாக டிசம்பர் 4 அன்று காணொலி மூலம் நடைபெற்ற அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரி வித்தார்.

                                  ******************

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

                                  ******************

காட்சிக்காக மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதாக ராஷ்டிரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

                                  ******************

விவசாயிகளுக்கு அரியானா அரசு மிகப்பெரிய தவறை செய்துள்ளதாக அரியானா முன்னாள்முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

                                  ******************

எம்.பில். மற்றும் பிஹெச்.டி. மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆறு மாத காலம் அவகாசம் அளித்துள்ளது.

                                  ******************

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூருக்கு மாற்ற மத்திய அரசு முடிவெடுத்திருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

                                  ******************

கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சுமார் 24 கோடி டாலர்கள் வரை கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

                                  ******************

அறிவுசார் சொத்துப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைக்கவும், அந்த அமைப்பை வலுப்படுத்துவதற்குமான அடுத்த 10 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டன.

                                  ******************

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

                                  ******************

6 பேரை தேர்வுசெய்ய நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமேலவைத் தேர்தலில் ஆளும் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு தொகுதியை மட்டும் பிடித்து பாஜக படுதோல்வியடைந்தது. பாஜகவின் நாக்பூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி யுள்ளது. ஒரு தொகுதியில் சுயேட்சை வென்றுள்ளார்.

;