india

img

55 ஆண்டுகளுக்குப் பிறகு டிச.17-ல் இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு மீண்டும் ரயில்பாதை திறப்பு....வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவிப்பு

புதுதில்லி:
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு செல்லும் ரயில்பாதை மீண்டும் 55 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட உள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வேதெரிவித்துள்ளது.இதுகுறித்து வடகிழக்கு எல்லை ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுபனன் சந்தா கூறியதாவது:

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையிலிருந்து, இந்தியாவிற்கும் பின்னர் கிழக்கு பாகிஸ்தான் இடையிலான ரயில் இணைப்புகள் முறிந்தது.அதிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பிஹார் மாவட்டத்தைச் சேர்ந்தஹால்திபரி முதல் வடக்கு வங்கதேசத்தின் சிலாஹதி வரையிலான ரயில் பாதை செயலிழந்துள்ளது.மேற்கு வங்கத்தின் ஹால்திபரி மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தின் சிலாஹதி ஆகியவற்றுக்கு இடையேயான ரயில் பாதை டிசம்பர் 17 அன்று திறக்கப்படுகிறது. 
55 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கிவைப்பார்கள். அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை ஒரு சரக்கு ரயில் இயக்கப்படும். ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும்.இவ்வாறு அதில் தெரிவித்தார்.ரயில் பாதையை மீண்டும் திறக்கும் முடிவை வெளிவிவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுக்கு அறிவித்ததாக கத்திஹார் பிரதேச ரயில்வே மேலாளர் ரவீந்தர் குமார் வர்மா தெரிவித்தார்.