india

img

பொன்முடி விவகாரம்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பொன்முடி வழக்கு விவகாரத்தில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, பொன்முடி அமைச்சராக தொடரலாம் எனவும் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக காலியாக இருந்த திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் அமைச்சராக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து, பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் தொடர்பான மனு இன்று தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அப்போது பொன்முடிக்கு எதிரான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க மறுக்கிறாரா என்றும், ஆளுநர் என்ன செய்கிறார் என அவருக்கு தெரிகிறதா? முதலமைச்சர் பரிந்துரையை அவர் நிராகரிக்கிறாரா? இந்த விவகாரத்தில் ஆலோசனையை கூறுங்கள் இல்லையெனில் கடுமையான கருத்துக்களை பதிவு செய்யப்படும் எனவும் உச்சநீதீமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஆஜரான மத்திய தலைமை வழக்கறிஞர் வெங்கடராமன், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசை பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டு மீண்டும் அமைச்சராக பொறுப்பு வகிக்க ஆளுநர் மறுப்பு தெரிவிப்பதாகவும், நாங்கள் பரிந்துரை செய்த ஒருவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.