india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

சத்தீஸ்கரில் சனிக்கிழமையன்று ராணுவத்துக்கும் நக்சல்களுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது கடத்தப்பட்ட ராணுவவீரரின் புகைப்படத்தை நக்சலைட்டு கள் வெளியிட்டுள்ளனர்.

                                ***************

உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் சுற்றுச்சூழல் சவால்களை இணைந்து சந்திக்க வேண்டும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் சிறப்புத் தூதரான ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

                                ***************

2021 ஆம் ஆண்டுக்கான இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை நடத்துவது குறித்து இருதரப்பும் தீவிர ஆலோசனை நடத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

                                ***************

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

                                ***************

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல்  9 ஆம்  தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை சென்னை, மும்பை, தில்லி,கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

                                ***************

வாகனம் ஓட்டிச் செல்லும் போது தூங்கினால், ஓட்டுநரை எழுப்பும் வகையிலான கருவியை, ஹைதராபாத்தில் உள்ள ராணுவமின்னணு மற்றும் மெக்கானிகல் பொறியியல் கல்லூரி கண்டுபிடித்துள்ளது.

                                ***************

மகாராஷ்டிராவில் ஜொமேட்டோ (Zomato) மற்றும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனங்கள் இரவு சேவையை நிறுத்தியுள்ளன.

                                ***************

யஷ்வந்தபுரம் - விஜயாப்புரா இடையே முன்பதிவில்லாத தினசரி சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

                                ***************

உலகில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வருகிறதுஎன்று அபுதாபியில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் அலி அல் ஒபைத்லி தெரிவித்துள்ளார்.

                                ***************

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

                                ***************

மகாராஷ்டிராவில் கொரோனா  தொற்று அதிகரிக்க வெளிமாநி லங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்” என்று நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

                                ***************

பொது இடங்களுக்கு செல்லும் போது காரை தனியாகவே ஓட்டிச்சென்றாலும் மாஸ்க் கட்டாயம் அணி வேண்டும். மாஸ்க் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு ஆயுதம் போன்றது. இதில்ஆட்சேபம் தெரிவிப்பதற்கு எதுவும்இல்லை. தடுப்பூசி போட்டிருந்தாலும் மாஸ்க் அணிவது  கட்டாயம் என தில்லிஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

                                ***************

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதாகவும் இன்னும்3 நாள்களுக்கு மட்டுமே  போடக்கூடிய அளவுக்கு தடுப்பூசிகள் இருப்புஇருப்பதாகவும், மாநிலத்தின் பலஇடங்களில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். 

                                ***************

கொரோனா தொற்று வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்குகட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அறி வித்துள்ளது.

                                ***************

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை யடுத்து,மத்தியப் பிரதேச அரசு சத்தீஸ்கருடனான  பேருந்து போக்குவரத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது.

                                ***************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதனன்று 98.73 அடியாக குறைந்தது.  

                                ***************

கும்பகோணத்தில் ஓட்டுக்கு ரூ.2,000 டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து கும்பல் ஒன்றுஏமாற்றியுள்ளது. பெரியகடை வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த மளிகை கடை உரிமையாளர்இந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

;