india

img

மோடி அரசு ரூ.3 ஆயிரம் கோடி கொடுத்தால் நல்லது... இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி தயாரிக்க எங்களிடம் பணமில்லை..

புதுதில்லி:
“இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி தயாரிக்கத் தங்களிடம் போதுமான பணம் இல்லை” என்று, ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ‘சீரம்’ நிறுவன முதலாளி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.

குறைந்த விலையில் தடுப்பூசியை வழங்கிவரும் தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ. 3 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்தால் உதவியாக இருக்கும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆதார் பூனவல்லா, இதுதொடர் பாக அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

ind“மொத்த உலகிற்கும் இந்த தடுப்பூசி தேவைப்படுகிறது. எனினும், இந்தியாவின் தேவைகளுக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி வழங்கும் அளவிற்கு உற்பத்தி இப்போது நடைபெறவில்லை. அனைவருக்கும் தேவையான மருந்தை உற்பத்தி செய்ய எங்களுக்கு 3000 கோடி ரூபாய் தேவை. கொரோனா தடுப்பூசியின் சராசரி விலை சுமார் 20 டாலர். (ரூ. 1500),  ஆனால்,நாங்கள் இந்தியாவில் மோடி அரசின் கோரிக்கையை ஏற்று மானிய விலையில்தான் வழங்குகிறோம். நாங்கள் இதுவரை லாபம் ஈட்டவில்லை இதில் நாங்கள் அதிக லாபம் ஈட்டவேண்டும் என்று விரும்பவில்லை. அநேரம் மறுமுதலீட்டிற்காவது எங்களுக்கு பணம் வேண்டும். இதற்காக எங்களுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. அத்துடன் தேவையான மருந்தை உற்பத்தி செய்வதற்கான செயல்முறைக்கு குறைந்தது 85 நாட்கள் ஆகும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மாதத்திற்கு சுமார்100 மில்லியன் அளவுக்கு மருந்து உற்பத்தியை உயர்த்த முடியுமென்றாலும் - தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவுக்கு மற்ற உற்பத்தியாளர்களும் தேவைப்படுகிறார்கள். 

இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படும் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்-வி’ தயாரிப்பில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறோம். அதேபோல எங்களின் ‘கோடஜெனிக்ஸ்’ விரைவில் சோதனை செய்யப்படும். ‘கோடஜெனிக்ஸ்’ ஒருமுறைபயன்படுத்தும் அளவிலான நாசி தடுப்பூசியாக இருக்கப் போகிறது. இதுஒரு சாத்தியமான ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.தொற்றுநோயால் பாதிக்கப்படுவதையும்கூட நாசி தடுப்பூசி தடுக்கும்”இவ்வாறு பூனவல்லா கூறியுள்ளார்.

;