india

img

அதிகளவில் பயன்படுத்துவதால் பெட்ரோல் விலை உயர்கிறதாம்.... பெட்ரோலியத்துறை அமைச்சரின் ‘புது விளக்கம்’

புதுதில்லி:
அதிகமாக நுகரப்படும் பொருட்களின் விலை அதிகமாகவே இருக்கும்என்று பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு மத்திய பெட்ரோலி யத்துறை அமைச்சர் ‘புது விளக்கம்’கொடுத்துள்ளார். 

நேபாளம், இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகவே உள்ளது. ஒரு லிட்டர்பெட்ரோல் 90 ரூபாயை தாண்டி யும்   டீசல்  83.18 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அன்றாடம் பெட்ரோல், டீசல்விலை உயருவதால் மக்களும்வாகன ஓட்டிகளும் அவதிப்படு கின்றனர். இந்த விலையுயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல்,  அதற்கு புது விளக்கம் அளித்துக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில்  இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. விஷாம்பர் பிரசாத்நிஷாத் பேசுகையில், “அன்னை சீதா பிறந்த நேபாளத்திலும் ராவணனின் இலங்கையிலும் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. அந்தவகையில் ராமர் பிறந்த இந்தியா விலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?” என சமூக வலைதளங்களில் உலவும் தகவலை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், “பெட்ரோல், டீசலை குறைவாக பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு. மாறாக, நம் நாட்டின் எரிபொருள் விலையை பெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். பொதுவாக அதிகமாக நுகரப்படும் பொருட்கள் விலை அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.32-க்கு கிடைக்கிறது. ஆனால், நேபாளம், வங்கதேசத்தில் ரூ.57 முதல் ரூ.59 வரை விற்கப்படுகிறது” என்று புது விளக்கம் கொடுத்துள்ளார்.

;