india

img

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம்:கேரள சிபிஎம் புதுமுக எம்.பி அசத்தல் பேச்சு

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் இருப்பதாக ராஜ்யசபாவில் கேரளாவை சேர்ந்த புதுமுக எம்.பியான ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார்.

கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் புதுமுக எம்.பி.யுமான ஜான் பிரிட்டாஸ்  ராஜ்யசபாவில் பேசியதாவது:

இந்தியாவில் இதுவரை 47 பேர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் 14 பேர் பிராமணர்கள்.

பிராமணர் ஆதிக்கம் 1950-ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 14 பேரில் 11 பேர் பிராமணர்கள். 1980-ம் ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாமல் போனது ஏன்? உலகத்திலேயே நீதிபதிகள் நியமனம் இந்த அளவு ரகசியமானதாக எங்கேனும் இருக்கிறதா? நீதித்துறையின் சுதந்திரத்தை தற்போதைய நீதிபதிகள் நியமன முறை (கொலீஜியம், கொலிஜியம்) கேள்விக்குள்ளாக்குகிறது.

நீதிபதிகள் தேர்வு முறை மீது விமர்சனம்

தகுதியான நீதிபதிகளை கண்டறிந்து நியமிக்க நீதித்துறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. நீதிபதி அகிலேஷ் குரேஷி திட்டமிட்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப்படாமல் இருக்கிறார் ஏன்? அவர் செய்த குற்றம்தான் என்ன? இந்த நாட்டின் அதிசக்தி வாய்ந்த நபரை சிறைக்கு அனுப்பியவர் என்பதாலா? (2010-ம் ஆண்டு குஜராத் மாநிலம் சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிறைக்கு அனுப்பியவர்).

. நீதிபதி பதவிகள் காலியிடங்கள்

நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் இத்தகைய நீதிபதி நியமனங்களை நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார். நீதித்துறையில் பன்முகத்தன்மை இல்லை. நாட்டின் உயர்நீதிமன்றங்களில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 1098. ஆனால் 406 நீதிபதி பதவிகள் காலியாக இருக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் மட்டுமே 57 லட்சம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இவ்வாறு ஜான் பிரித்தாஸ் பேசினார்.

வெங்கையா நாயுடு பாராட்டு

ஜான் பிரிட்டாஸின் முதல் பேச்சை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பாரட்டினார். இது தொடர்பாக வெங்கையா நாயுடு கூறுகையில், கேரளா எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு மிக அற்புதமானது. நான் மிகவும் உன்னிப்பாக ரசித்து கேட்டேன். ஆனால் அவரது இந்த பேச்சு ஒருவரி கூட மறுநாள் ஊடகங்களில் வெளிவராது என்பது அதிருப்தி தருகிறது என்றும் குறிப்பிட்டார்.

;