முல்க்ராஜ் ஆனந்த் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். இவர் 1905ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தார்.
ஆங்கிலத்தில் எழுதிய முதல் இந்திய நாவல் ஆசிரியர் இவர். இவரின் படைப்புக்கள் அனைத்தும் பழங்கால இந்தியாவின் சமூக ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்திய -ஆங்கில இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார். மேலும் முல்க்ராஜ் ஆனந்த், ஆர். கே. நாராயணன், அகமது அலி மற்றும் ராஜா ராவ் ஆகியோர் தான் முதன்முதலில் இந்தியாவை மையப்படுத்தி ஆங்கிலத்தில் எழுதினர். இதன் மூலம் எழுத்துலகில், உலக அளவில் இந்தியப் படைப்புகளுக்கான ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆனந்தின் புதினங்கள், சிறுகதைகள் ஆகியவை சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் உள்ள வறுமை, அவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் இடர்பாடுகள் போன்றவற்றைப் பற்றியே அமைந்திருக்கும். மேலும் பஞ்சாபி மற்றும் இந்துஸ்தானி மொழி ஆகிய மொழிகளில் உள்ள மரபுத்தொடரை ஆங்கில இலக்கியங்களில் முதலில் பயன்படுத்தியவரும் இவர்தான். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விபூசண் விருதினைப் பெற்றுள்ளார்.முல்க்ராஜ் ஆனந்த் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் மறைந்தார்.
===பெரணமல்லூர் சேகரன்===