india

img

குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று இருப்பதாக தகவல்

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பொது மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் பல பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகள் முழுமையாக இயங்கத் துவங்கி உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய உருமாற்றம் அடைந்த எக்ஸ் இ வகை கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து குஜராத் வந்த ஒரு நபருக்கு கொரோனா எக்ஸ் இ வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் மேலும் ஒருவருக்கு எக்ஸ் எம் வகை பாதிப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனினும் இந்த தகவலை தேசிய ஜீனோம் கழகமோ ஒன்றிய அரசோ இன்னும் உறுதி படுத்தவில்லை.
ஏற்கனவே கடந்த வாரம் மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்இ வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த வியாழனன்று ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.