india

img

டிசம்பரில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை-இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் உயர்ந்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்(CMIE) தெரிவித்துள்ளது.

2021 நவம்பரில் 7% ஆக இருந்த வேலையின்மை விகிதம் டிசம்பரில் 7.9% ஆக உயர்ந்துள்ளது.இதற்கு முன்பு அதிகபட்சமாகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.3% என்ற அளவில் இருந்துள்ளது.

2021 நவம்பரில் 8.2% ஆக இருந்த நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் 9.3% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கிராமப்புற வேலையின்மை விகிதமும் 6.4% லிருந்து 7.3% ஆக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

வேலையில்லாதோர்க்கு வேலையில்லா கால நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.