health-and-wellness

img

குழந்தைகளை பாதிக்கும் கண் தொற்று வைரஸ்

காலநிலை மாற்றத்தின் காரணமாக மெட்ராஸ் - ஐ எனப்படும் கண் தொற்று நோய் வேகமாக பரவி வருவதாகவும், இந்நோய் வழக்கத்தை காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளதாகவும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்ணின் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் - ஐ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான தொற்று, காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் செளந்தரி கூறியதாவது, மெட்ராஸ் - ஐ எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய் தொற்றுதான். ஆனால் அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதை காலதாமதப்படுத்தினால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும். ஆகவே அறிகுறி தெரிந்தவுடனே மருத்துவர்களை அணுக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

மேலும் கடந்த சில வாரங்களாக நாளுக்கு 5 பேர் வீதம் மெட்ராஸ்- ஐ பாதிப்பு என்று வருகின்றனர். அதில் பலர் குழந்தைகளாக உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்றவை இதன் அறிகுறிகள் என தெரிவித்துள்ளார்.
 

;