health-and-wellness

img

வைட்டமின் ‘டி’ சத்துக் குறைந்தால் கொரோனா எளிதில் தாக்கும்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுதில்லி:
வைட்டமின் டி சத்து உடலில் அதிகமாக இருந்தால் கொரோனாவை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும் என்றும் வைட்டமின் டி சத்துக் குறைந்தால் கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உடல் சோர்வு, முதுகு வலி, மூட்டுவலி, எலும்பு  மெலிதல், தலைமுடி அதிகமாக உதிர்தல் போன்ற அறிகுறிகள்தான் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள். இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றை எதிர்கொள்ளவும் வைட்டமின் டி சத்து அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்தவைட்டமின் டி சத்து உடலில் நிகழ்த்தும் வேலைகள் அதிசயிக்கத்தக்கது.

எலும்புகளை உறுதிப்படுத்தவும், இரத்தத்தில் கால்சியம் அளவை சீராக பார்த்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும், ஹார்மோன் வேலைகளை சீராக்கவும் என பல வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. இதில் ஏதாவதுஒன்று குறைந்தாலும் நமக்கு உடல் நலப் பாதிப்புகளை உண்டாக்கும்.இதனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்விலும் வைட்டமின் D சத்துக் குறைந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வை லியுமிட் ஹெல்த் சர்வீஸ் (Leumit Health Services (LHS) மற்றும்  பார் இலான் பல்கலைக்கழகத்தின் அஸ்ரிலி மருத்துவ நிறுவனம் ( Azrieli Faculty of Medicineof Bar-Ilan University) ஆகியவை நடத்தியுள்ளன. இதில் இரத்த பிளாஸ்மாக்களின் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் கொரோனா தொற்று தாக்குவதாகக் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வு போலவே இதற்கு முன் ஏஜிங் கிளினிக்கல் இதழ் வெளியிட்ட ஆய்விலும் வைட்டமின் டி சத்து உடலில் அதிகமாக இருந்தால் கொரோனாவை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். அதேசமயம் இந்த தொற்றால்இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் கூறியது.

எனவே வைட்டமின் டி சத்து என்பதுஉணவு மூலம் மட்டும் பெறக்கூடியது அல்ல. சூரிய வெளிச்சத்தின் மூலமாக இயற்கையாகவே கிடைக்கக் கூடியது. எனவே தினமும் 11 - 1 மணி வரையிலான சூரியன் உடலுக்கு நல்லது.முட்டை, காளான் போன்ற உணவுகளி லும் வைட்டமின் டி சத்து நிறைவாக உள்ளது.

;