ஸ்பைருலினா 3.5 பில்லியன் ஆண்டுகளாக இவ்வுலகத்தில் காணப்படுகின்றன. இந்த நுண்ணிய நிலப்பச்சை பாசியை மனிதன் பல நூறு ஆண்டுகளாக அறிந்திருந்தாலும் தற்போதுதான் இதன் உடல் நலக் காப்புத் திறத்தினை மனிதன் அறிவார்த்தமாக உணர்ந்துள்ளான். இது பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் பலனளிப்பதை புரிந்து கொண்டு இன்றுவரை பல கோடி மக்கள் நாற்பது நாடுகளில் இதனை உண்டு உடல் நலத்தைப் பேணி வருகின்றனர். அண்மைக்காலமாக அமெரிக்க புற்றுநோய் கழகத்துடன் பல மருத்துவர்களும் பீட்டா கரோட்டின் அதிகமுள்ள உணவை உண்டு புற்று நோயிலிருந்தும், மற்றும் ஊடுகதிர் தாக்கம், மன அழுத்தம் முதலியவைகளிலிருந்தும் காத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். இந்த பீட்டாகரோட்டின் மற்ற உணவுப்பொருட்களைவிட ஸ்பைருலினாவிலும், டுனாலிவினாலும் மிக அதிக அளவில் காணப்படுகிறது.
பீட்டா கரோட்டின் என்றால் என்ன?
உணவில் இரண்டுவிதமான வைட்டமின்கள் உள்ளன. இதில் வைட்டமின் ‘ஏ’யும் பீட்டாகரோட்டின் என்ற வைட்டமின் முன்னோடியும் ஆகும். வைட்டமின் ‘ஏ’ மீன்களிலும் ஆடு, மாடு ஈரலிலும் காணப்படுகிறது. ஆனால் பீட்டாகரோட்டின் தினம் நாம் உண்ணும் பழங்களிலும், காய்கறிகளிலும் உள்ளன. இதுவே கரோட்டின் எனவும், வைட்டமின்களின் முன்னோடி எனவும் அழைக்கப்படுகிறது. இது உடலில் கொழுப்பு திசுக்களில் அப்படியே சேமித்து வைக்கப்பட்டு தேவைக்குத் தகுந்தபடி வைட்டமின் ‘ஏ’வாக மாறி உடலில் திசுக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இயற்சையாக கிடைக்கிறது என்றாலும் செயற்கையாகவும் தயாரிக்கப்பட்டு நிறத்திற்காகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. மிக அதிகமாக மேலை நாடுகளில் வெண்ணெய், முட்டை மஞ்சட்கருவிலும் மற்றும் மாற்கரினிலும் அதிக மஞ்சை நிறத்தை அளிக்க உபயோகப்படுத்துகிறது. பீட்டாகரோட்டினால் கிடைக்கப்பெறும் வைட்டமின் ‘ஏ’ யினால், தோல், கண், தோலின் உட்புறம் சிறப்புடன் இருக்கவும் அதனை தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், உடல் திசுக்கள் புதிதாக உண்டாகவும், அதனை நன்றாக இருக்க பராமரிக்கவும், மேலாண்மை புரியவும், பல், முடி, எலும்பு மற்றும் பல திசுக்களின் செரிமான, சுவாச, இனவள உறுப்புக்களின் சளிப்படலம் வளரவும், கண்ணில் இரவில் தெரிய உதவும் பார்வை நிறமிகளை மறுஉறுவாக்கவும், சூரிய ஒளியிலிருந்து தோலை பாதுகாத்துக் கொள்ளவும் மேலும் கேடுவிளைவிக்கும் சுற்றம் சூழ்நிலையிலிருந்து செல்களை காப்பாற்றவும் உதவுகிறது.
புற்றுநோயை தடுக்க பீட்டாகரோட்டின் உதவுகிறதா?
உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்களும் அறிவியலாளர்களும் பீட்டா கரோட்டின் அதிகமுள்ள உணவுகளை உண்ணுவதால் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும் என்று நம்புகின்றனர். இதன் காரணமாகவே பழம், காய்கறி, முழுதானியம் ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள தேசிய புற்றுக்கழகம் அறிவுறுத்துகிறது. இதுபோலவே குடல்கழுவுதல் மூலம் திசு சுத்தம் செய்யும் முறையை செய்து பல நோய்களை வெற்றிக்கொள்ளும் டாக்டர் பன்னட் ஜென்சன் தினமும் உணவில் இயற்கை உணவை 50-60 விழுக்காடு உண்ண சொல்வதும் இங்கு நினைவு கூரத்தக்கது. இதேபோல் ஜப்பானிலும் மிக அதிக அளவில் கருவாடு உண்டுவந்த மாவட்டங்களில் அதை உண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு அதற்கு பதில் காரட் மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளை உண்ணச் செய்ததன் காரணமாக சுமார் 10 ஆண்டுகளுக்குள் சுமார் 50 விழுக்காடு இரைப்பை புற்று விழுக்காடு குறைவு ஏற்பட்டு காணப்பட்டதும், மருத்துவ கணக்கீடுகளினால் அறியப்பட்ட முடிவு வைட்டமின் ‘ஏ’ குறைவானால் புற்று ஏற்படும் என்பது. இதன் அடிப்படையில் சிலவகை வைட்டமின் ‘ஏ’க்களை கருநிற புற்றான மெலனேமாவிற்கு கொடுத்த பின்பு அது சுருங்கி காணப்படுகிறது. இதேபோல் சூரியஒளியினால் உண்டாகும் தோல் புற்று வர ஒரு காரணமான ஆக்டினிக் கரோடோசிஸ் என்னும் நோயை போக்கவும் வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது. இதேபோல் ஆய்வுக்கூடங்களில் லுக்கிமியா எனும் இரத்தப்புற்று நோய் மறுபடியும் நல்ல நிலைக்கு கொணரவும் இது உதவுவதாக அறியப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகள்
இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளில் மிக முக்கியமானது ‘லான்செட்’ எனும் புகழ்பெற்ற இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் வெளிவந்த மருத்துவ முடிவு ஆகும். சுமார் 2000 வெஸ்ரன் எலக்டிரிக் தொழிலாளர்களின் உணவு முறையை கண்காணித்து அவர்களின் 3 சாராருக்கு 10,000 அலகு பீட்டா கரோட்டினுடன் உணவும் மற்றொரு சாராருக்கு பீட்டா கரோட்டின் அற்ற உணவும் வழங்கப்பட்ட பின்பு சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்று விழுக்காடு பீட்டா கரோட்டின் உண்ட நபர்களுக்கு மிகக் குறைந்த விழுக்காடே என்பதாகும். இதுபோலவே இங்கிலாந்து தேசிய புற்றுக்கழகமும் பீட்டா கரோட்டின் உணவு உண்டவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவுடன் காணப்படுவதாகவும் கூறுகிறது.
கதிரியக்க கேடும் இயற்கை பாதுகாப்பும்
தோல் புற்றை உண்டாக்கவல்ல அல்ட்ரா வையலெட் ஒளியிலிருந்து தாவரங்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள அதன் செல்களிலே ஒருவித தடுப்பு நடைபெறுகிறது. அதிகமாக சூரிய ஒளிதாக்கத்திற்கு உள்ளாகும்பொழுது அது தானாகவே அதிகமான பீட்டாகரோட்டினை உற்பத்தி செய்து தன்னை காத்துக் கொள்கிறது. இந்தவித மாற்றங்கள் அதிக அளவில் அல்ட்ரா வைலட் ஒளியை வீசும் சில கிரகங்களில் உள்ள பாசியில் மிக பொழுதும் அதிகமாக நடைபெறுகிறது.
பீட்டா கரோட்டின்
பச்சையாய் அதிகமுள்ள ஸ்பைருலினாவிலும், ருனாலிலாவிலும் தான் மிக அதிக அளவு பீட்டாகரோட்டின் உள்ளது. இது ஏனெனில் சூரிய ஒளியால் ஏற்படும் தீங்குகலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் வேதியியல் மாற்றுத்தினாலேயே ஆகும். இதனாலே இது ஒரு அண்டி ஆக்சிடெண்ட் எனப்படுகிறது.
வயது முதிர்வும் புற்றும்
இருதய நோய், புற்று மற்றும் இரத்தக்குழாய்களின் கொலெஸ்டிரால், படிமங்கள் உண்டாவது பொதுவாக வயதினால் ஏற்படும் ஏற்படும் ஓர் இயற்கை சீர்கேடே ஆகும். முப்பது வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சுமார் 16 மடங்கு அதிகமாக புற்றுதோன்ற வாய்ப்பு உண்டு. 85 சதவீத ஆண்டை தொடும்பொழுது மக்கள்தொகையில் 30 விழுக்காடு புற்றிற்றி ஆளாகின்றனர். மனிதன் வயது முதிர்வதற்கான காரணமாக சொல்லப்படும் கருத்து ஆக்சிடைசிங்க டி என்ற ஏ - வினால் ஏற்படும் பழுதே எனப்படுவது இதை அறிந்து உறுதிசெய்யும் பொருட்டு தற்பொழுது 23,000 மருத்துவர்கள் செயற்கை பீட்டாகரோட்டினை ஒரு சாராரும் மற்றொரு சாரார் இயற்கை பீட்டா கரோட்டினையும் உண்டு ஆய்வரங்கில் உள்ளனர். முடிவுகளை அறிய உலகம் ஆவலோடு காத்துக்கிடக்கிறது.
எந்த உணவுகளில் பீட்டா கரோட்டின் அதிகமுள்ளது
வியாபாரரீதியாக விற்கப்படும் பொருள்களில் ஸ்பைருலினாலிவே தான் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது ஒவ்வொரு கிராமிலும் காரட்டில் உள்ளதைப்போல் 15 மடங்கு அதிகம் உள்ளது. இவைகளைத் தவிர ஆரஞ்சு, கரும்பச்சை, அடர்மஞ்சள் நிறமுடைய பப்பாளி, மாம்பழம், பசலைக்கீரை மற்றும் சிவப்புநிற பழம் காய்கறிகளிலும் பீட்டா கரோட்டின் உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படும் பீட்டாகரோட்டின் விலை இயற்கை பீட்டா கரோட்டினைவிட பாதிவிலையில் கிடைத்தாலும் புற்றைத் தடுக்கவல்லது அல்லது என அறியப்பட்டுள்ளது.