headlines

img

சந்திரயான் 2 வெல்லட்டும்!

50 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1969 ஜூலை 20 அமெரிக்க நேரப்படி மாலை 4.17 மணியளவில் பிரபஞ்ச வரலாற்றில் முதன்முறையாக சந்திர னில் மனிதன் தனது காலடியை பதித்தான். அமெ ரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய இரு வரும் சந்திரனில் இறங்கிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சியை உலகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாக 650 மில்லியன் மக்கள் பார்த்து பரவசப்பட்டார்கள். சந்திரனில் தடம் பதித்து 4 நாட்களுக்குப் பின்னர், 2 லட்சத்து 40 ஆயிரம் மைல் தொலை விலிருந்து மீண்டும் பத்திரமாக பூமியில் தரை இறங்கினார்கள் அந்த வீரர்கள். 

சந்திரனுக்கு வெற்றிகரமாக பயணித்து விட லாம் என்ற நம்பிக்கையை அமெரிக்க விஞ்ஞானி களுக்கு ஏற்படுத்தியவர் சோவியத் ஒன்றி யத்தின் புகழ்மிக்க விண்வெளி வீரர் யூரி ககாரின் என்று சொன்னால் மிகையல்ல. விண்வெளிக்கு வெற்றிகரமாக பயணித்த முதல் விண்வெளி வீரர்  யூரி ககாரின். 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத்தின் வசுதோக் 1 என்ற விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார் ககாரின். ககாரின் பயணமே அமெரிக்க விஞ்ஞானி களுக்கும் தூண்டுகோலாக அமைந்தது. அவர்கள் சந்திரனுக்கு புறப்பட்டார்கள். அப்பல்லோ விண்கலம் ஆம்ஸ்ட்ராங்கையும், ஆல்ட்ரினை யும் சுமந்து சென்று சாதனை படைத்தது. சந்திரனின் மீதான அன்பும், காதலும் அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கை யும் மனிதகுலத்திற்கு மிக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. கோப்பர் நிக்கஸ், கலிலியோ, கெப்ளர், ஐசக் நியூட்டன், எல் பராடே, மேக்ஸ்வெல், ஐன்ஸ்டீன் என வரலாறு நெடுகிலும் சந்திரனைப் பற்றியும், அதன் இயக்கத்தை பற்றியும் வான் இயற்பியல் பற்றியும் இன்றைக்கு மனிதகுலம் அறிந்திருக்கும் அதிகபட்ச அறிவுக்கு வித்திட்ட மகத்தான விஞ்ஞானிகள் பலர். 

அரை நூற்றாண்டு ஆன பின்னரும், சந்திர னில் மனிதன் இறங்கிய அந்த முதல் நிகழ்வு இப்பூவுலகின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி யின் வரலாற்றில் ஒரு மகத்தான சகாப்தமாக திகழ்கிறது. இன்றைக்கும், அந்த அற்புதம் நம்மை ஈர்க்கிறது. மீண்டும் மீண்டும் சந்திரனின் மர்மங்க ளையும், அதில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற வளங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்கு உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் தனது ஆய்வின் எல்லையை விரிவுபடுத்தி யுள்ளது. சந்திரயான் 1 தனது இலக்கை துல்லிய மாக எட்டியது. சந்திரனில் இறங்கியது இந்தியா என்ற பெருமையை அளித்தது. அடுத்ததாக சந்திரயான் 2 தனது பயணத்தை இன்று (ஜூலை 22) துவக்கவுள்ளது. கடந்தவாரமே நிகழ்ந்திருக்க வேண்டிய இந்த பயண துவக்கம் சில தொழில்நுட்ப கோளாறு களால் தாமதப்பட்டிருந்தாலும் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணம், சந்திரனைப் பற்றிய புதிய பல தகவல்களை உலகிற்கு அளிப்பது உறுதி. வெல்லட்டும் சந்திரயான் 2.

;