headlines

img

புதைகுழி மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை சுஜித் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தமிழகத்தை மட்டு மின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது.

கடந்த 25ஆம் தேதி வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்க 84 மணிநேரத் திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து அந்தக் குழந்தை யை உயிரற்ற நிலையில்தான் மீட்க முடிந்துள்ளது என்பது நமது அறிவியல் தொழில்நுட்பத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

அரசுத் தரப்பில் சுஜித்தை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது என்பது உண்மை. மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட உயரதிகாரிகள் நடுக்காட்டுப் பட்டியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை ஒருங்கி ணைத்தனர் என்பது உண்மைதான். ஆனால் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டமுயற்சி களில் ஒருங்கிணைந்த தன்மை இருந்ததா, காலத்தே உரிய முடிவு எடுக்கப்பட்டதா, ஆழ் குழாய் கிணற்றில் விழுந்தவர்களை உடனடியாக மீட்பதற்கு முன்வந்தவர்களின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டதா என்பதெல்லாம் பல்வேறு கேள்வி களை எழுப்புவதாகவே உள்ளது.

ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உரிய தொழில்நுட்பம் உடனடியாக கண்ட றியப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந் துள்ளது. இது உடனடி முன்னுரிமைப் பணியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு நிகழும் மரணம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும் ஆகும். 

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பா லான பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பியே விவ சாயம் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது. சில நூறு அடிகள் என்ற நிலையைத் தாண்டி சில  ஆயிரம் அடிகள் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் நாளுக்குநாள் அதிர்ச்சிய ளிக்கும் வகையில் குறைந்து வருகிறது. எப்படி யாவது விவசாயம் செய்து உயிர் பிழைக்க வேண்டும் என்று விவசாயிகள் பெரும் கடன் பெற்று ஆழ்குழாய் கிணறு அமைக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள் அபாயகர மான முறையில் மூடப்படாமல் இருக்கின்றன என்று வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சிய ளிக்கின்றன. இவையனைத்தையும் மூட வேண்டும் என்ற விழிப்புணர்வை சுஜித்தின் மரணம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆழ்குழாய் கிணறுகளை ஒரேடி யாக மூடுவதற்கு பதிலாக மழைநீர் செறிவூட்டும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்று நிபு ணர்கள் முன்வைக்கும் ஆலோசனையும் புறந் தள்ளக்கூடியது அல்ல. 

ஒரு விபத்து நிகழும் போது அதுகுறித்து பரப் பரப்பாக பேசுவதும் பின்னர் அப்படியே விட்டு விடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இனி யாவது ஆழ்குழாய் கிணறுகள் குழந்தைகளின் புதைகுழியாவதை தடுக்க அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட வேண்டும். இதுதான் சுஜித் நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கும் பாடம்.

;