headlines

img

நாங்கள் சொல்லவில்லை...

இந்தியா ஒரு மிக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வீழ்ந்துகொண்டிருக்கிறது என பளிச்சென்று கூறியிருக்கிறார் இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாளர் ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பொருளாதார அறிஞர்களும் இதை ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள். சீத்தா ராம் யெச்சூரி ஒரு படி மேலே போய் இது ஒரு மிகப்பெரிய பொருளாதார மந்தம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார நெருக்கடி தொடர்பாக உறுப் பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பதி லுரைக்குப் பதிலாக ஆத்திரத்தையே பதிலாக அளித்தார். எதிர்க்கட்சிகள், மோடி அரசின் செயல்பாடுகளை புரிந்துகொள்ளவோ, பொறுமை காக்கவோ தயாராக இல்லை என்று வசை பாடினார். 

ஆனால் அவர்களது அரசாங்கத்தின் பொரு ளாதார ஆலோசகராக செயல்பட்ட பொருளா தார வல்லுநரான அரவிந்த் சுப்பிரமணியனே இப்போது அதைத்தான் கூறியிருக்கிறார். “மிக  மிகப்பெரிய நெருக்கடி இது. தெளிவாகச் சொல்வதானால் இது ஒரு சாதாரண நெருக்கடி அல்ல. இந்தியாவின் மிகப்பெரிய நெருக்கடி; இன்னும் பளிச்சென்று சொல்லப்போனால் இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரி வில் இருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

இரண்டு முக்கிய காரணங்களை அவர் வகைப்படுத்துகிறார். ஒன்று, இரும்பு எஃகு மின்சாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு ஆகிய  மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் கடந்த பல்லாண்டுகாலமாக முதலீடு என்பது மிக மிக மோசமான அளவிற்கு வீழ்ச்சியை சந்தித் திருக்கிறது; இரண்டாவது, பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன; குறிப்பாக, வங்கித் துறை அல்லாத நிதி நிறுவனங்கள் மிகக்கடுமையாக அடிவாங்கியிருக்கின்றன; ரியல் எஸ்டேட் தொழில் முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளது. 

வங்கித் துறை அல்லாத நிதி நிறுவனங்களின் கைகளில் புழங்கி வந்த மிகப்பெரிய அள விலான தொகை - அதாவது சுமார், ரூ.5லட்சம் கோடி அளவிற்கான நிதி, ரியல் எஸ்டேட் துறையின் மூலமாகத்தான் சுழற்சியில் விடப் பட்டு வந்திருக்கிறது; அந்தத் துறை தற்போது  முடங்கியிருப்பது அடுத்தடுத்த விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது. 

இதுகுறித்து அரவிந்த் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சில புள்ளி விபரங்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. கடந்த நான்காண்டு காலத்தில் இந்தியாவின் முதன்மையான 8 மாநகரங்களில் கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படா மல் நிலுவையில் இருக்கிற வீடுகள், பிளாட்டு களின் எண்ணிக்கை மட்டும் 10லட்சத்திற்கும் அதிகமாகும். இவற்றின் மதிப்பு ரூ.8லட்சம் கோடி ஆகும். ஏற்கெனவே நெருக்கடியில் இருந்த ரியல் எஸ்டேட் துறையை மேலும் நெருக்கடி யில் தள்ளிய மோடி அரசு இனி மீள்வது கஷ்டம் என்கிறார் அவர். 

மோடியின் ஊதுகுழல்களே, உங்களின் பதில் என்ன?

;