headlines

img

இடியாய் இறங்கும் எண்ணெய் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த் தப்பட்டு வருவதால் அனைத்து அத்தியாவசி யப் பொருட்களின் விலையும் ஒரு சுற்று மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சரக்கு கட்டணங்களும்  உயரும் நிலை உள்ளது. ஆனால் இதுகுறித்து மத்திய பாஜக கூட்டணி அரசு கொஞ்சம் கூட கவலைப்படாமல் 11ஆவது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

புதனன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.32 பைசாவாகவும், டீசல் விலை லிட்ட ருக்கு ரூ.74.23  காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.78 அளவுக்கும், டீசல் விலை ரூ.6.01 அளவுக்கும் உயர்ந்துள்ளது. கடந்த 7ஆம்தேதி முதல் பெட் ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப்  பொறுத்தே இங்கு எரிபொ ருள் விலை நிர்ணயிக்கப்படுவதாக கூறப்படுகி றது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்த போதும், அதன் பலன் மக்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்ற வன்மத்துடன் இருமுறை கலால் வரி உயர்த்தப் பட்டது. இதனால் விலை குறையாதது மட்டு மல்ல, உயரவும் செய்தது.

மாநில அரசுகள் வாட் வரியை இந்தக் காலத்தில் உயர்த்தியுள்ளன. தமிழகத்தில் வாட் வரி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25ம், டீசலுக்கு ரூ.2.50ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பெரும் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி யுள்ளது. அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே அல்லாடும் நிலை உள்ளது. இந்த நிலையில் மத்தி யில் உள்ள மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக தொடர்ந்து விலை யேற்றம் செய்து இந்திய மக்களுக்கெதிராக ஒரு மறைமுக யுத்தத்தையே தொடுத்துள்ளது.

இப்போது தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் மட்டுமல்ல, அம்பானி போன்ற தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபம் பெறுவதற்காகவுமே இந்த விலை உயர்வு பயன்படுகிறது. 

எண்ணெய் வர்த்தகத்தை கொஞ்சம் கொஞ்ச மாக தனியார் கையில் கொடுக்கும் வேலையையே மோடி அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதி யாகவே பாரத் c தனியாருக்கு விற் கப்படும் என அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒவ்வொரு பொதுத்துறை எண்ணெய் நிறுவ னத்தையும் தனியாருக்கு கொடுக்க திட்டமிடு கிறது மத்திய மோடி அரசு.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது முடக் கம் தொடரும் நிலையில், முடங்கிக் கிடக்கும் மக்க ளின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக நிர்மூல மாக்கவே மோடி அரசு முயல்கிறது. இதை கைவிட்டு பெட்ரோல், டீசல் விலையை சரிபாதி அளவுக்கு குறைக்க முடியும். இதற்கு அரசு தயாரா?

;