headlines

img

பெருகும் வேலையின்மையும் அரசின் பொறுப்பின்மையும்

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் தமிழ கத்தில் அனைத்து அரசுத்துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடைவிதிக்கப் பட்டுள்ளதாக மாநில நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். கடந்த சட்டப்பேர வைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “அரசுத் துறைகளில் காலி யாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப் படும்; அ.தி.மு.க. அரசின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப் படும்’’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை என்பது தான் புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை ஆகும்.

நாட்டிலேயே அதிக வேலையின்மை உள்ள மாநிலம் தமிழகம் ஆகும். இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை சமீபத்தில் மாநில அரசு 59 ஆக உயர்த்தியது வேலையில்லா வாலிபர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. பணி யில் உள்ள பல ஊழியர்களே இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

கொரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி யாலும் வேலையின்மையாலும் கோடிக்கணக் கான மக்கள் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற தவிப்பில் உள்ளனர். ஏற்கெனவே பொரு ளாதார மந்த நிலையால் தொழில்துறைகள் முடங்கி விட்டன. அதிக வேலைவாய்ப்பு வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் மூடப்பட்டு விட்டன.

தங்களின் பொருளாதார தேவைக்காக, விவ சாயம் சாராத தொழில்களை நம்பி அதிக தொழி லாளர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. எனவே, தொழில்துறைகள் மூடப்பட்ட பிறகு வேலை இழப்புகள் அதிகரித்துள்ளன. ஊர டங்கு ஊரக பகுதிகளை விட நகரப் பகுதிகளில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே நகரமயமாக்கல் தமிழகத்தில் தான் அதிகம். எனவே நகர்ப்புற வேலையின்மை பல மடங்கு அதிகரிக்கும் என்றுபொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  ‘தென் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் முந்திரி, பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் பலர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர். 

கடந்த ஆண்டு ஜூலையிலிருந்து, ஆட்டோ மொபைல் துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளால் அந்த துறையில் பணிபுரிந்த ஏராளமானோர் வேலை இழந்தனர். இதுபோல், ஜவுளித்துறையும் ஊரடங்கிற்கு முன்பே மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று. 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சத்துக் கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்ற னர். ஐடி துறையில் வேலை குறைப்புக்கு நிறுவ னங்கள் தயாராகி வருகின்றன. எனவே, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பவும், பெருமளவில் புதிய பணியிடங்களை ஏற்படுத்த வும் முன்வர வேண்டும்.

 

;