headlines

img

தகவல் அறியும் உரிமைக்கு சங்கு ஊதுவதா?

மோடி அரசு இரண்டாவது முறையாக பதவி யேற்றபிறகு நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே ஏராளமான சட்டத் திருத்தங் களை நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு மாறாக கொண்டு வந்தது. முத்தலாக் தடைச் சட்ட மசோதா துவங்கி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசனம் வழங்கியிருந்த 370ஆவது பிரிவை ரத்து செய்தது வரை பல்வேறு திருத் தங்கள் அவசர கதியில் கொண்டுவரப்பட்டன.

தொழிலாளர் நலச் சட்டங்களை இணைப்பது என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளை  பறிக்கும் சட்டத்திருத்தங்கள் முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப கொண்டு வரப்பட்டன. புதிய மோட்டார் சட்டம் என்ற பெயரில் கடுமையாக அப ராதம் விதிக்கும் பிரிவுகள் மட்டுமின்றி மோட்டார் தொழிலை அழிக்கும் பல்வேறு திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் என்ற பெயரில் இந்திய குடிமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கே வேட்டு வைக்கப்பட்டன.

இத்தகைய தாக்குதல்களின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை முற்றிலும் நீர்த்துப் போக செய்வதற்கான திருத்தங்களும் கொண்டு வரப்படுகின்றன. காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின்போது அந்த அரசுக்கு ஆதரவளித்து வந்த இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது இந்த சட்டத்தை அர்த்தமிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மோடி அரசின் முதலாவது ஆட்சியின்போது தகவல் ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்படா மல் காலியாக விடப்பட்டன. தலைமை தகவல் ஆணையர் பணியிடம் பத்து மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்தது. 

தற்போது தகவல் உரிமை ஆணையத்தின் பல்லைப் புடுங்கும் வகையில் தகவல் ஆணை யர்கள் பதவிக்காலம் ஐந்து ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணையர்களுக்கு நிகராக ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அவ்வப்போது இதை தீர்மானிக்கும் என்று திருத்தப்பட்டுள்ளது. 

குடிமக்கள் யாரும் தகவல் பெறும் நிலை இருந்ததை மாற்றி தகவல் ஆணையத்தை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவ தற்காகவே இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள் ளன. அரசுக்கு எதிரான தகவல்களை வெளியிட் டால் அவர்கள் பணியில் நீடிக்க முடியாத நிலை உருவாக்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த அரசு வெளிப்படையாக அனைத்துத் தகவல்க ளையும் வெளியிடுவதால் தகவல் அறியும் உரி மைச்சட்டம் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார். உண்மையில் மோடி அரசு ஜம்மு- காஷ்மீர் உட்பட எந்த ஒரு விஷயத்தி லும் வெளிப்படையாகவோ, நேர்மையாகவோ நடந்து கொள்வதில்லை. இதை மூடி மறைக்கவே தகவல் அறியும் உரிமைச்சட்டம் திருத்தப்பட்டுள் ளது. இது இந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள கொடும் தாக்குத லாகும்.

;