headlines

img

மனதின் குரலா?  மனசாட்சி அற்ற குரலா?

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித் துள்ளது. மேலும் ஞாயிறன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 8,380 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்து 82 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடிந்துவிட வில்லை. இந்த நோயை வெல்ல நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். தற்போது எனது கவனமெல்லாம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மீதுதான் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை புலம் பெயர் தொழிலாளர்களை முற்றிலுமாக கைவிட்டு விட்டது என்றே கூற வேண்டும்.

அவர்களது பய ணச் செலவை கூட முழுமையாக ஏற்க மறுத்து ஏற்கெனவே நிதிச்சுமையால் தள்ளாடிக் கொண் டிருக்கும் மாநிலங்களின் தலையில் சுமத்தியது மத்திய அரசு. பிழைப்பை விடுத்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் அவர்களை நோயிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலி ருந்தும் பாதுகாப்பதற்கு தம்முடைய அரசு எந் தெந்த வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் எதுவும் கூறவில்லை. வெறும் உபதேச வார்த்தைகளும், ஆறுதல் மொழியும் மட்டுமே பிரதமரிடமிருந்து வெளிப்பட்டு உள்ளது. இந்தியாவை சுயசார்பு பொருளாதார நாடாக மாற்றுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளதாக கூறும் பிரதமர், கிராமங்கள், நக ரங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் சுயசார்பு டன் இருந்திருந்தால் இந்தளவுக்கு சிரமங்களை நாம் எதிர்கொண்டிருக்க இருந்திருக்காது என வருத்தப்படுகிறார் பிரதமர் மோடி.  

ஆனால் சுயசார்பு என்கிற பெயரில் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு திறந்துவிடுவது, மாநிலங்கள் கோரும் நிதியை தர மறுப்பது, சிறு, குறு தொழில் கள் மற்றும் விவசாயத் துறையை மீட்டெடுக்க உருப்படியான திட்டங்களை உருவாக்க மறுப்பது என்ற ரீதியில்தான் மோடி அரசு செயல் படுகிறது. பிறகு எங்கிருந்து வரும் சுயசார்பு? கொரோனா தொற்று மற்றும் சமூக முடக்கத் தால் ஏற்பட்ட நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய தாராளமய பொருளாதார திட்டத் தை மேலும் தீவிரமாக்குவதில்தான் மோடி அரசு கவனம் செலுத்துகிறது. உள்நாட்டு சந்தை புழக் கத்தை அதிகரிக்க வேண்டும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என நடுநிலை யான பொருளாதார நிபுணர்கள் மற்றும் இடது சாரிக் கட்சிகள் முன்வைக்கும் ஆலோசனைகளை கேட்பதற்கு இந்த அரசிடம் காதுகள் இல்லை. மாறாக கார்ப்பரேட் முதலாளிகளின் குரல் மட்டுமே பிரதமர் மோடியிடமிருந்து மனதின் குரலாக ஒலித்து வருகிறது. இது நடைமுறை யில் நாட்டை பற்றி கவலைப்படாத மனசாட்சி யற்ற குரலாகவே ஒலிக்கிறது.

;