headlines

img

கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்கா?

கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு மிக முக்கிய உலகப் பிரச்சனையாக மாற்றப்பட்டி ருக்கிறது. பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சரி செய்யவும் சம் பந்தப்பட்ட அரசுகள் பணிகளை முடுக்கி விட்டுள்ளன என்ற போதிலும், உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் பெரும் பரபரப்பையும் பதற்றத் தையும் ஏற்படுத்தியுள்ளன. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை உடனடியாக சரி செய்து உலக நாடுகளை அதிலி ருந்து மீட்பதற்கு பதிலாக, இந்த வைரஸ் சீனா வில் இருந்துதான் உருவானது என்றும், எனவே  சீனாவை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும், கடந்த இரண்டு மாதங்க ளுக்கும் மேலாக அமெரிக்கா இடைவிடாத அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே கடும் பாதிப்பை சந்தித்த சீனா, தனது ஒட்டு மொத்த மக்களையும் பாதுகாப்பதற் காக இரண்டு மாத காலம் ஒரு நொடியைக்கூட வீணாக்காமல் ராக்கெட் வேகத்தில் செயல் பட்டது. சீனாவின் நோய்த் தடுப்பு நடவடிக்கை களும், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுத்து நிறுத்திய மகத்தான சாதனையும் நாம் வாழும் காலத்தில் ஒரு சோசலிச அரசு தனது மக்களை எப்பாடுபட்டாவது பாதுகாக்கும் என்பதை நிரூபித்துள்ள மிகப் பிரம்மாண்டமான, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான எடுத்துக்காட்டாகும்.

ஆனால், கொரோனா வைரஸ் சீனாவிலி ருந்து உருவானது என்று வீண் பேச்சு பேசிக் கொண்டிராமல், உங்கள் நாட்டில் பாதிப்பு ஏற்படுவ தற்கு முன்பு தடுத்து நிறுத்துகிற வழியைப் பாருங்கள் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரித் தது. ஆனால் டிரம்ப் நிர்வாகம் அதை அலட்சி யப்படுத்தியது. இப்போது இத்தாலிக்குப் பிறகு 22 பேரை பலிகொடுத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இப்போதும் அந்நாடு, தனது மக்களைப் பாது காப்பதற்கு பதிலாக சீனாவை இழிவுபடுத்துவ திலேயே குறியாக இருக்கிறது. 

இந்த நிலையில்தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் 2019 அக்டோபரில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் இருந்து பரவியது என்பது உண்மைதான்; ஆனால் உகான் நகருக்கு அதை கொண்டு வந்து சேர்த்தவர்கள் அமெரிக்காவின் ராணுவப் பிரதிநிதிகள் என்று லிஜியான் குறிப் பிட்டுள்ள தகவல் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களை புளூ வைரஸ் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. புளூ வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த சில நோயாளிகளின் உடலில் கொரோனா வைரஸ் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்று உகானுக்கு வந்த அமெரிக்க ராணுவப் பிரதிநிதிகள் தெரிவித்த தாகவும் அவர்களே உகானில் அந்த வைரஸ் பரவ காரணம் என்றும் லிஜியான் குறிப்பிட்டி ருக்கிறார். சீனாவுக்கு எதிரான, அமெரிக்காவின் தொற்று நோய் பரப்பும் திட்டமா இது என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது திணறத் துவங்கியிருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

;