headlines

img

வியாபாரப் போட்டியில் வீழ்த்தப்படும் அறம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் பெண்க ளுக்கெதிரான வன்முறை, கும்பல் பாலியல் வன் கொடுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வித மாக காட்சிகள் அமைத்ததற்காக அந்தத் தொடரின் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்டுள்ளார்.  இந்த தொடரில் வந்த காட்சிகள் சர்ச்சைக் குள்ளாகி தொலைக்காட்சித் தொடர்களை கண்காணிக்கும் ஒளிபரப்பு உள்ளடக்க புகார் மையத்திற்கு (பிசிசிசி) புகார் சென்றதால்தான் தொடர் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்டுள் ளார். தொலைக்காட்சிகளில் வெளியாகும் பல்வேறு தொடர்கள் அருவருக்கத்தக்கதாகவும், அநாகரிகமாகவும், பெண்களை  இழிவுபடுத்து வதுமாகவே உள்ளன. அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கைகளை வளர்ப்பதாகவும், புராண புனை கதைகளை புதுப்பிப்பதுமாகவுமே பல தொடர்கள் அமைந்துள்ளன. இதுகுறித்து பிசிசிசி எந்த நட வடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

‘கல்யாண வீடு‘ தொடரில் சித்தரிக்கப்பட்ட அந்தக் காட்சிகள் அநாகரிகத்தின் உச்சம். மனித மாண்புகளையே காலில் போட்டு மிதிக்கும் தன்மை கொண்டவை. அந்தத் தொடரில் ரோஜா என்ற கதாபாத்திரம் தன்னுடைய சொந்த அக்காவையே கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்குமாறு ரவுடிகளுக்கு உத்தரவிடு வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம்தான் தன்னுடைய சகோதரிக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கும் ராஜா என்ற கதாபாத்திரத்துக்கும் புத்தி வரும் என்று கூறப்படுகிறது.

அழுகிப் போன வக்கிரமான ஒரு மூளை யிலிருந்து தான் இத்தகைய சிந்தனைகள் உரு வாகும். இந்தத் தொடரை ஒளிபரப்பு செய்த சன் டிவி நிர்வாகத்திற்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த அநாக ரிகத்திற்கு சன் டிவி நிர்வாகமும் பொறுப் பேற்பதோடு, இனி இத்தகைய தொடர்களை ஒளிபரப்ப மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும். இதே போன்று பெண்களை இழிவு படுத்தும் தொடர்களை ஒளி பரப்ப மாட்டோம் என அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்க ளும் உறுதியேற்க வேண்டும். சுய தணிக்கை முறைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எதிராகவும், சிறுமிகளுக்கு எதிராகவும் கூட பல்வேறு பாலியல் கொடுமை கள் தினம் தினம் நடந்து வருகின்றன. திரைப் படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் எந்தவித மான சமூகப் பொறுப்பும் இல்லாமல் ஒளிபரப்பா கும் காட்சிகளும் இதற்கு முக்கியமான காரண மாகும்.

தொலைக்காட்சிகள் அதிகரித்துவிட்ட நிலையில், தங்களது வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், விளம்பரத்தை பெருக்க வும், மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன. பொழுது போக்கு என்ற பெயரில் செய்யப்படும் இந்த சமூக விரோத செயல்களை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும், சட்டப்பூர்வமாக தண்டிக்க வும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  

;